Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்நடுவானில் வந்த வெடிகுண்டு மிரட்டல்; படையெடுத்த போர் விமானங்கள்

    நடுவானில் வந்த வெடிகுண்டு மிரட்டல்; படையெடுத்த போர் விமானங்கள்

    அமெரிக்காவிலிருந்து சிங்கப்பூர் சென்ற விமானம் ஒன்று நடுவானில் பயணித்தபோது பயணி ஒருவர் தனது பையில் வெடிகுண்டு இருப்பதாக கூறி விமான ஊழியர்கள் மற்றும் பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

    சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்து 209 பயணிகளுடன் சிங்கப்பூர் சென்றது. அப்போது நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த நிலையில், பயணி ஒருவர் தனது பையில் வெடிகுண்டு உள்ளதாக மிரட்டியுள்ளார்.

    மேலும், அவர் விமான ஊழியர்களுடன் மோதலிலும் ஈடுபட்டுதோடு ஒருவரை தாக்கியும் உள்ளார். இதை அடுத்து, அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவர் எந்த வெடிகுண்டும் வைத்திருக்கவில்லை என்பது தெரியவந்தது.

    இது குறித்து சிங்கப்பூர் காவல்துறைக்கு விமான நிலைய ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர்.

    இடைத்தொடர்ந்து, சிங்கப்பூர் விமான படைக்கு சொந்தமான விமானங்கள் பயணிகள் விமானத்தை பாதுகாப்புடன் அழைத்து வந்தன. அந்த விமானம் ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி, சிங்கப்பூர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

    பிறகு, அங்கிருந்த காவல்துறையிடம் மிரட்டல் விடுத்த அந்த நபர், ஒப்படைக்கப்பட்டார். மேலும் அந்த நபர் கைது செய்யப்பட்டு, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடிய கத்ரீனா…இணையத்தில் வைரலான காட்சி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....