Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடிய கத்ரீனா...இணையத்தில் வைரலான காட்சி!

    அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடிய கத்ரீனா…இணையத்தில் வைரலான காட்சி!

    ‘அரபிக்குத்து’ பாடலுக்கு பள்ளிக் குழந்தைகளுடன் கத்ரீனா கைஃப் நடனமாடிய காணொலி சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

    பாலிவுட் முன்னணி நடிகைகளில் ஒருவர், கத்ரீனா கைஃப். பாலிவுட் திரைப்படங்களிலேயே அதிகளவில் நடித்திருந்தாலும் இவருக்கு தென்னிந்தியாவிலும் அதிகளவில் ரசிகர் கூட்டம் உள்ளது. இவர் கடந்த ஆண்டு இறுதியில் பாலிவுட் நடிகர் விக்கி கௌசலை மணந்தார். 

    கத்ரீனா கைஃப் திருமணத்திற்கு பிறகும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது, தனது கணவர் விக்கி கௌசலுடன் இணைந்து கோவிந்தா நாம் மேரா, ரவுலா போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். 

    இந்நிலையில், மதுரையில் ‘மவுண்டன் வியூ பள்ளி’ நிகழ்ச்சி ஒன்றில் கத்ரீனா கைஃப் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில், விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அரபிக்குத்து’ பாடலுக்கு பள்ளிக் குழந்தைகளுடன் கத்ரீனா கைஃப் நடனமாடியுள்ளார். அவர் நடனமாடும் காட்சியானது தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

    மாணவர்களுக்கு ஆங்கில வழிக் கல்வியை வழங்குவதற்காக, 2015-ம் ஆண்டு மதுரையில் திறக்கப்பட்ட மவுண்டன் வியூ பள்ளியை கத்ரீனா கைஃபின் தாயார் சுசானே நீண்ட காலமாக அவரின் அறக்கட்டளை மூலமாக நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: ‘வாரிசு’ படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களை சந்தித்த விஜய் – இணையத்தில் வைரலாகும் வீடியோ

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....