Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாநடமாடும் திருமண மண்டபமாக மாறிய 'ட்ரக் லாரி' - வியந்து பாராட்டி 'ஆனந்த் மகேந்திரா' ட்விட்

    நடமாடும் திருமண மண்டபமாக மாறிய ‘ட்ரக் லாரி’ – வியந்து பாராட்டி ‘ஆனந்த் மகேந்திரா’ ட்விட்

    இந்திய பணக்காரர்களுள் ஒருவரும் மிகப்பெரிய தொழிலதிபருமான மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் காணொளி ஒன்றை பகிர்ந்துள்ளார். 

    மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் மிகவும் ஈடுபாட்டுடன் செயல்படுவர். இணையதளத்தில் அவர் பார்த்து வியந்த பதிவுகளையும், காணொளிகளையும், அவர் என்றும் பகிர மறந்ததில்லை என்றே சொல்லலாம். இவருக்கென பார்வையாளர்களும் இவரை பின் தொடர்பவர்களும் அதிகமாக உள்ளனர்.

    இந்நிலையில், அவர் சமீபத்தில் பகிர்ந்துள்ள ஒரு காணொளி ஒன்று நெட்டிசன்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    அந்தக் காணொளியில், வாகனங்களை ஏற்றி செல்லும் ஒரு பெரிய ட்ரக்கையே (truck) திருமண மண்டபமாக மாற்றியுள்ளனர். இந்த ட்ரக் மண்டபத்தில் ஏசி உள்ளது. வாகனத்தின் பக்கவாட்டில் தற்காலிகச் சுவர்களை நகர்த்தி விருந்தினர்கள் அமரும் அறை நொடி பொழுதில் தயாராகிறது. 

    இதையும் படிங்க: ‘வாரிசு’ படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களை சந்தித்த விஜய் – இணையத்தில் வைரலாகும் வீடியோ

    இந்த ட்ரக் திருமண மண்டபத்தில் 200 பேர் அமரலாம் என அந்தக் காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, 40-க்கு 30 என்ற சதுர அடி கொண்ட இந்த மொபைல் ஹாலில் மரச்சாமான்களும் இடம்பெற்றுள்ளன. 

    இதுகுறித்து, ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது:

    இந்த தயாரிப்பின் கான்செப்ட் மற்றும் வடிவமைப்பின் பின்னணியில் உள்ள நபரை, நான் சந்திக்க விரும்புகிறேன். சிந்தனைமிக்க படைப்பு. தொலைதூர இடங்களுக்கு உகந்தது. அதுமட்டும் அல்லாமல் மக்கள் தொகை அடர்ந்த நாட்டில் நிரந்தர இடம் தேவைப்படாத, சுற்றுச்சூழலுக்கு உகந்த கண்டுபிடிப்பு.

    இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார். 

    இந்நிலையில் இந்தக் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....