Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்'ஓசி டிக்கெட்' என பெண்களை அசிங்கப்படுத்திய பொன்முடி- தலைவர்கள் கண்டனம்

    ‘ஓசி டிக்கெட்’ என பெண்களை அசிங்கப்படுத்திய பொன்முடி- தலைவர்கள் கண்டனம்

    பேருந்தில் பெண்களுக்கு இலவச பயண சீட்டு வழங்கப்பட்டுள்ளதை அமைச்சர் ஓசி டிக்கெட் என பேசியது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயகுமார் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து, சீமான் தெரிவித்துள்ளதாவது:

    இரண்டரை லட்சம் கோடி கடன் வைத்திருக்கிறார் அதானி. அவரைப்போய் உலகப்பணக்காரர் என்கிறார்கள். இது ஒரு கொடுமை. சொந்த நாட்டு மக்களை பிச்சைக்காரர்களாக வைத்திருப்பது தான் இந்த நாடு ஏற்றுக்கொண்ட பொருளாதாரக் கொள்கை.

    இது தான் இவர்களின் ஆட்சிமுறை. அரசு பஸ்சே எங்களின் வரி பணத்தில் தான் வாங்கியுள்ளீர்கள்.உங்கள் பணத்தில் வாங்கவில்லை. பஸ்சில் பெண்கள் ஓசி-யில் பயணம் செய்யவில்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: கூட்டுறவு துறை சார்பில் சாலையோர கடைகளுக்கு கேஸ் சிலிண்டர்!

    மேலும் இதுகுறித்து, முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளதாவது:

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை தொடர்ந்தால் திமுக ஆட்சி கலைக்கப்படும். ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட எந்த அமைப்பாக இருந்தாலும் அதிமுக ஆட்சிக்காலத்தில் அனுமதி கொடுக்கவில்லை.

    திமுகவின் இரட்டை வேடத்தால் பொதுமக்கள் பயந்துள்ளனர். ஓசி டிக்கெட் என சொல்லி பெண்களை அவமானப்படுத்தியுள்ளார் அமைச்சர் பொன்முடி. திமுக அமைச்சர்கள் தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....