Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்அண்டார்டிக் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் மைக்ரோ பிளாஸ்டிக்..!!

    அண்டார்டிக் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் மைக்ரோ பிளாஸ்டிக்..!!

    முதல் முறையாக அண்டார்டிக் பகுதியில் மைக்ரோ பிளாஸ்டிக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நியூஸிலாந்தினைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அண்டார்டிக்காவின் ரோஸ் தீவுகளில் நடத்திய ஆய்வுகளில் இந்த மைக்ரோ பிளாஸ்டிக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    ரோஸ் தீவுகள் பகுதிகளில் 19 இடங்களில் புதிதாகப் பொழிந்துள்ள பனியினை ஆராய்ச்சிக்கு எடுத்திருந்த ஆராய்ச்சியாளர்கள், 29 விதமான மைக்ரோபிளாஸ்டிக்குகள் இடம்பெற்றிருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

    இந்த மைக்ரோ பிளாஸ்டிக்குகள் அருகில் இருக்கும் ஆராய்ச்சிக் கூடங்களில் இருந்து வந்திருக்கும் என்று எண்ணப்பட்டாலும், மற்றொரு கோணத்தில் இருந்து பார்க்கும் போது இவை 6,000 கிலோமீட்டர்களுக்கு அப்பாலிருந்து வந்திருக்கக்கூடும் என்று எண்ணப்படுகிறது.

    ‘உலகில் மனிதர்கள் காலடித்தடம் பதியாத இடங்களில் ஒன்றாக அண்டார்டிகா இருந்து வருகிறது. பல ஆண்டுகளாக இந்த இடமானது எந்தவிதமான மாசுபாடுகளும் இன்றி இருந்துவந்துள்ளது. சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாடு அண்டார்டிக்காவினையும் விட்டுவைக்கவில்லை. தற்போது அனைத்து கண்டங்களிலும் மைக்ரோ பிளாஸ்டிக் பரவியுள்ளது.’ என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

    கண்ணுக்குத் தெரியாத அளவில் இருக்கும் இந்த மைக்ரோ பிளாஸ்டிக் காற்றினாலும், நீரினாலும் எளிதில் எடுத்துச் செல்லப்படுபவையாக உள்ளன. மனிதர்கள் இதுவரை செல்லாத இடங்களில் கூட இந்த மைக்ரோ பிளாஸ்டிக்குகள் தங்களது இருப்பினைப் பதிவு செய்து வருகின்றன. இதனால் ஏதோ ஒரு இடத்தில் ஏற்படும் மாசுபாடானது வேறொரு இடத்தில் விளைவினை ஏற்படுத்துகிறது.

    இந்த மைக்ரோ பிளாஸ்டிக்குகள் கடல் வாழ் உயிரினங்களுக்கு பெரும் இன்னல்களினை விளைவித்து வருகின்றன. குறிப்பாக இந்த மைக்ரோ பிளாஸ்டிக்கினை உட்கொண்டுள்ள மீன்களை உணவாக மனிதர்கள் உண்பதன் மூலம் இவை எளிதாக மனிதர்களின் உடலில் நுழைகின்றன. 

    மைக்ரோ பிளாஸ்டிக்குகள் உடலுக்கு எந்த விதமான தீமைகளை ஏற்படுத்தும் என்று கண்டறியப்படாத நிலையில், பல உயிரினங்களின் உடலுக்குள் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பது சமீபத்திய ஆய்வுகளின் முடிவில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், அண்டார்டிகாவில் புதிதாகப் பெய்துள்ள பனிப்பொழிவில் கண்டறியப்பட்டுள்ள மைக்ரோ பிளாஸ்டிக் ஆராய்ச்சியாளர்களிடையே பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.

    சாதி விட்டு சாதி திருமணம்; தீர்ப்பு வந்த கண்ணகி மற்றும் முருகேசன் ஆணவக்கொலை வழக்கு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....