Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்ஆம்ஸ்டர்டாம் ஏன் முக்கிய நகரமென தெரியுமா?

    ஆம்ஸ்டர்டாம் ஏன் முக்கிய நகரமென தெரியுமா?

    ஆம்ஸ்டர்டாம், இது நெதர்லாந்தின் தலைநகரம், துறைமுகம், முக்கிய வணிக மையம் மற்றும் நிதி மையமுமாகும். ஆம்ஸ்டர்டாம் நெதர்லாந்தின் பெயரளவிலான தலைநகர், ஆனால் அரசாங்கத்தின் தலைமை செயலகம் ஹேக்கில் அமைந்துள்ளது.

    பெரும்பாலான தேசிய தலைநகரங்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் ஆம்ஸ்டர்டாம் ஒரு சிறிய நகரம் ஆகும். இதன் பெயர் காரணம் ஆம்ஸ்டல் நதியில் வெள்ளத்தை கட்டுப்படுத்த கட்டப்பட்ட ஆம்ஸ்டல் அணைக்கட்டிலிருந்து பெறப்பட்டது.

    ஆம்ஸ்டர்டாமின் பழைய பகுதியில் பல பழமையான கட்டிடங்கள் உள்ளன, குறிப்பாக 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழைய தேவாலயம் மற்றும் 15 ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட புதிய தேவாலயமும் ஆகும்.

    புதிய தேவாலயத்திற்கு அடுத்ததாக 17 ஆம் நூற்றாண்டின் நகர மண்டபம் உள்ளது. இப்போதுள்ள அரச அரண்மனை பாரம்பரிய பல்லேடியன் பாணியில் கட்டப்பட்டுள்ளது. மற்ற குறிப்பிடத்தக்க கட்டிடங்களில் மின்ட் டவரும் அடங்கும், 17 ஆம் நூற்றாண்டின் ஒரு இடைக்கால வாயிலில் தங்கியுள்ளது; தெற்கு தேவாலயம், மேற்கு தேவாலயங்களும் இங்கு அமைந்துள்ளது. இங்கு தான் மிகவும் புகழ் பெற்ற டச்சு ஓவியர் ரெம்ப்ராண்ட் கல்லறை உள்ளது.

    இங்குள்ள டிரிப்பென்ஹூயிஸ் பகுதியில் ராயல் நெதர்லாந்து கலை மற்றும் அறிவியல் அகாடமியைக் அமைந்துள்ளது; மற்றும் ஓல்ட் மேன்ஸ் ஹவுஸ் கேட் (Oudemanhuispoort), இப்போது ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தின் முக்கிய கட்டிடங்களில் ஒன்றின் நுழைவாயிலாகும். பழைய நகரத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள முன்னாள் யூதக் குடியிருப்பு, போர்த்துகீசிய ஜெப ஆலயம் (1671) மற்றும் ரெம்ப்ராண்ட் ஹவுஸ் ஆகியவற்றின் இருப்பிடமாகவும் ஆம்ஸ்டர்டாம் திகழ்கின்றது. ரெம்ப்ராண்ட் இல்லம் தற்போது அருங்காட்சியகமாக உள்ளது. பழைய நகரத்தின் மூன்று முக்கிய சதுக்கங்கள் அணை, லைடன் சதுக்கம் மற்றும் ரெம்ப்ராண்ட் சதுக்கம் ஆகும்.

    1632 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகம் மற்றும் 1880 இல் நிறுவப்பட்ட இலவச பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு பல்கலைக்கழகங்களுக்கும் இந்த நகரத்தில் அமைந்துள்ளன. இந்நகரம் கட்டிடக்கலை மற்றும் கலாச்சாரத்தில் ஆர்வமுள்ள பல சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது.

    அவர்கள் பொற்காலத்தின் மிகச்சிறப்பாகப் பாதுகாக்கப்பட்ட கால்வாய் பக்க மாளிகைகள் மற்றும் அரச அரண்மனை உட்பட ஏராளமான வரலாற்று நினைவுச்சின்னங்களைத் தேடுகிறார்கள். ஆம்ஸ்டர்டாமில் கலைகள் முக்கியப் பொருளாதாரப் பாத்திரத்தை வகிக்கின்றன.

    ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்குகின்றன. மற்றும் இந்நகரம் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட $1 பில்லியன் வருவாய் ஈட்டுகின்றது. முக்கிய ஏல மையங்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட கேலரிகள் இங்கு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    சாதி விட்டு சாதி திருமணம்; தீர்ப்பு வந்த கண்ணகி மற்றும் முருகேசன் ஆணவக்கொலை வழக்கு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....