Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்தீவிரவாத நடவடிக்கைகளில் மெட்டா ஈடுபட்டதா? - ரஷ்ய சொன்ன புகார்..முடக்கப்படுமா செயலிகள்?

    தீவிரவாத நடவடிக்கைகளில் மெட்டா ஈடுபட்டதா? – ரஷ்ய சொன்ன புகார்..முடக்கப்படுமா செயலிகள்?

    ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் நீடித்து வரும் நிலையில், மெட்டாவின் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகளுக்கு ரஷ்யா தடை விதிக்கவுள்ளது. 

    ரஷ்ய அரசுக்கு ஆதரவளிக்கும் செய்திகளை பயனர்கள் பார்ப்பதை முகநூல் கட்டுப்படுத்துவதாகவும், அதேசமயம் ரஷ்யப் படைகளை எதிர்த்து வன்முறைக்கு அழைப்பு விடுத்தவர்களின் பதிவுகளை முகநூல் உள்ளிட்ட மெட்டா நிறுவனத்தின் செயலிகளில் அனுமதித்ததாகவும் ரஷ்யா மெட்டா நிறுவனத்தின் மீது குற்றம்சாட்டியது. 

    இதைத்தொடர்ந்து, ரஷ்யாவில் தீவிரவாத நடவடிக்கைகளில் மெட்டா நிறுவனம் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி மெட்டாவின் முகநூலுக்கு ரஷ்யா தடை விதித்தது.

    இதையும் படிங்க:வெற்றிபெற்ற “டார்ட் திட்டம் “: உறுதிப்படுத்திய விஞ்ஞானிகள் ,நடந்தேறிய அறிவியல் அதிசயம் …

    இதனால், இதை எதிர்த்து மெட்டா நிறுவனம் சார்பாக தடையை எதிர்த்து மாஸ்கோ நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.  இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் முகநூலுக்கான தடையை உறுதி செய்து தீர்ப்பளித்தது.

    இந்நிலையில், மெட்டா நிறுவனத்தை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்து ரஷ்ய அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. மெட்டா நிறுவனம் பயங்கரவாத அமைப்புகளில் சேர்க்கப்பட்டதால், அந்நிறுவனத்தின் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பிரபல சமூக வலைதளங்களுக்கும் தடை விதிக்கப்படும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....