Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தும் அதானி!

    ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தும் அதானி!

    இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவையில் இறங்கியுள்ள அதானி குழுமத்திற்கு அதற்கான உரிமமும் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

    இந்தியாவில் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி ஆகிய நான்கு நிறுவனங்களும் பங்கேற்றன. அதானி குழுமம் தனது டெலிகாம் நிறுவனத்துக்கு அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் (Adani Data Networks) என பெயரிட்டுள்ளது.

    5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் நிறுவனம் 400MHz ஸ்பெக்ட்ரத்தை வாங்கி இருக்கிறது. இதன் மதிப்பு சுமார் 212 கோடி ரூபாயாகும். இதன்படி, அடுத்த 20 ஆண்டுகளுக்கு அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் நிறுவனம் 400MHz 5ஜி ஸ்பெக்ட்ரத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

    இதையும் படிங்க:பாம்பன் பாலத்தில் நேருக்கு நேராக மோதிக்கொண்ட பேருந்துகள்: நூலிழையில் உயிர் தப்பியது எப்படி ?

    இந்நிலையில், அதானி குழுமம் டெலிகாம் சேவைகளை வழங்குவதற்கு மத்திய அரசு உரிமம் வழங்கிவிட்டதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இதுகுறித்து அதானி நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை.

    அப்படி அரசு வழங்கியிருந்தால், அந்த உரிமத்தின்படி அதானி நிறுவனம் இனி இந்தியாவில் எல்லா வகையான டெலிகாம் சேவைகளையும் வழங்க முடியும்.

    உலகின் 2-வது மிகப் பெரிய பணக்காரராக இருக்கும் அதானியின் இந்தத் தொலைத் தொடர்பு வருகை ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களிடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....