Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலாயம் - வெளிவந்த அறிவிப்பு!

    தமிழகத்தில் இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலாயம் – வெளிவந்த அறிவிப்பு!

    இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயத்தை தமிழகத்தில் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. 

    இந்தியாவிலேயே முதல் தேவாங்கு சரணாலயம் தமிழகத்தில் அமையவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தேவாங்குகள் மரவகை இனத்தைச் சார்ந்தவைகள். ஆதலால், தங்களின் வாழ்வின் பெரும்பகுதியை மரங்களில்தான் கழிக்கின்றன. மேலும், இந்த தேவாங்குகள் சிறிய பாலூட்டிகளாகும். இப்படியான தேவாங்குகளை இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (IUCN) தேவாங்கு இனத்தினை அழிந்து வரும் இனமாக பட்டியலிட்டுள்ளது. 

    இதையும் படிங்க:கூடுதல் விலை கொடுத்து பால் வாங்க வேண்டிய கட்டாயம் – தி.மு.க. தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது ?

    இதனால், உலக நாடுகள் தேவாங்குகளின் எண்ணிக்கையை பெருக்க வேண்டுமென்றும், அவைகளின் இருப்பை தக்கவைக்க வேண்டுமென்றும் யோசனைகள் செய்து வருகின்றன. 

    இந்நிலையில், தமிழகத்தில் உள்ள திண்டுக்கல் மற்றும் கரூர் பகுதிகளை உள்ளடக்கிய காட்டுப்பகுதியை தேவாங்குகளின் சரணாலயமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 11,806.56 ஹெக்டேர் பரப்பளவில் இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயமாக “கடவூர் தேவாங்கு சரணாலயம்” அமைத்து தமிழ்நாடு அரசு இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....