Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ராமாயணத்தை தவறாக சித்தரித்ததா ஆதிபுருஷ்? படக்குழுவினருக்கு பறந்த நோட்டீஸ்!

    ராமாயணத்தை தவறாக சித்தரித்ததா ஆதிபுருஷ்? படக்குழுவினருக்கு பறந்த நோட்டீஸ்!

    ஆதிபுருஷ் படத்தில் ராமரையும், ராவணனையும், அனுமனையும் தவறாக சித்தரித்து இருப்பதாக டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. 

    பாகுபலிக்குப் பிறகு பிரபாஸ் நடிக்கும் திரைப்படங்கள் உலகளவில் கவனம் பெற்று வருகின்றன. பிரபாஸ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம்தான், ‘ ஆதி புருஷ்’. இந்தியாவின் பல மொழிகளில் இத்திரைப்படம் வெளியாகவிருக்கிறது. 

    நடிகர் பிரபாஸ், சைஃப் அலி கான் உள்ளிட்டோர் இணைத்து நடித்துள்ள இத்திரைப்படம் 500 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திரைப்படத்தை ஓம் ராவத் இயக்கியுள்ளார். 

    இதையும் படிங்க: ‘கொடி கொடி கொடி பறக்க…பொரி பொரி பொரி பறக்க…’ வசூல் வேட்டை நடத்தும் பொன்னியின் செல்வன்!

    சமீபத்தில் ‘ஆதி புருஷ்’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. டீசர் வெளியான முதலே, சமூக வலைதளங்களில் பல்வேறு ட்ரோல்களுக்கு ‘ஆதி புருஷ்’ உள்ளானது. மேலும், நெட்டிசன்கள் மீம்ஸ்களை உருவாக்கி பகிர்ந்தனர். இதன்பின்பு, 3டி தொழில்நுட்பத்தின் உதவியோடு இந்த டீசரை பார்த்தால் அதன் தன்மை மாறுபடும் என்று பலர் தெரிவித்தனர். 

    இந்நிலையில், பாரதிய ஜனதா பிரமுகர் மாளிகா அவினாஷ், ”இலங்கையை சேர்ந்த ராவணன் 64 கலைகள் கற்ற சிவ பக்தர். அவருக்கு ஜாக்கெட் அணிந்து நீல நிற கண்களுடன் சர்வாதிகாரி போல் தவறாக திரைப்படத்தில் காட்டி உள்ளனர். மேலும், ராமாயண சரித்திரத்தை தவறாக சித்தரித்து உள்ளனர்” என்று சாடினார். 

    இதைத்தொடர்ந்து, ஆதிபுருஷ் படத்தில் ராமரையும், ராவணனையும், அனுமனையும் தவறாக சித்தரித்து இருப்பதாக டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் பிரபாஸ் உள்ளிட்ட படக்குழுவினருக்கு கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....