Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமின் நுகர்வோர் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும்; ஏன் தெரியுமா?

    மின் நுகர்வோர் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும்; ஏன் தெரியுமா?

    மின் நுகர்வோர் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

    ஆதார் சட்டம் 2016 பிரிவு 7-ன் கீழ் மானியம் பெரும் அனைத்து மின் நுகர்வோர்களும் தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. 

    இந்த அரசாணையில், “முதல் 100 யூனிட்டை இலவசமாக பெறும் வீட்டு நுகர்வோர், இலவச மின்சாரம் பெறும் குடிசை நுகர்வோர் மற்றும் விவசாயிகள், 750 யூனிட் இலவச மின்சாரம் பெறும் விசைத்தறி நுகர்வோர் மற்றும் 2000 யூனிட்  இலவசமாக பெறுகிற கைத்தறி நுகர்வோர்கள், தங்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். 

    இதையும் படிங்க:ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தும் அதானி!

    அதேபோல், தொழிற்சாலைகள், நிறுவனங்கள் போன்ற மானியம் பெறாத மின் நுகர்வோர்கள் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் இல்லை. 

    ஒரே வளாகத்தில் அதிக இணைப்புகள் வைத்திருப்போர், பிற மோசடிகளில் ஈடுபடுவர்களை கண்டுபிடிக்கவே இந்த ஆதார் எண்ணை மின் நுகர்வோர்கள்  இணைக்க வேண்டும்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....