Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுதொடர்ந்து தோல்வி பாதையில் ஈஸ்ட் பெங்கால்...முன்னேற்றத்தில் கோவா!

    தொடர்ந்து தோல்வி பாதையில் ஈஸ்ட் பெங்கால்…முன்னேற்றத்தில் கோவா!

    ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் 6-வது ஆட்டத்தில் கோவா அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தியது.

    இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 9-ஆவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டி 2013-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. கால்பந்து ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றதாகவே ஐஎஸ்எல் இருந்து வருகிறது. 

    மேலும், இந்த வருடத்திற்கான ஐஎஸ்எல் இன்று தொடங்க உள்ளது. கொரோனா  சூழல் காரணமாக கடந்த 2 சீசன்களும் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நடத்தப்பட்ட நிலையில், இந்த சீசன் வழக்கமான ‘ஹோம்-அவே’ முறையில் நடைபெறுகிறது.

    எனவே, அனைத்து அணிகளும் தனது சொந்த மண்ணில் ஒரு ஆட்டமும், எதிரணி மண்ணில் ஒரு ஆட்டமும் விளையாட உள்ளன. மேலும், மைதானத்துக்கு நேரில் வந்து ஆட்டத்தைக் காண ரசிகர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க:‘கொடி கொடி கொடி பறக்க…பொரி பொரி பொரி பறக்க…’ வசூல் வேட்டை நடத்தும் பொன்னியின் செல்வன்!

    இந்நிலையில், ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் 6-ஆவது ஆட்டத்தில் எஃப்சி கோவா மற்றும் ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 7-வது நிமிடத்திலேயே கோவா அணி கோல் அடித்து தன் கணக்கை தொடங்கியது. 

    இதைத்தொடர்ந்து, ஆட்டத்தின் 2-வது பாதியில் பெங்கால் அணிக்காக கிளெய்டன் 64-ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் கோலடித்து ஆட்டத்தை சமன் செய்தார். ஆனால், கோவா அணி வீரர் எட்வார்டோ பெடியா பெலேஸ் கடைசியாக 90-ஆவது நிமிடத்தில் ஃப்ரீ கிக் வாய்ப்பில் அருமையாக கோலடித்து, அணியை வெற்றி பெறச் செய்தார்.

    இதன்மூலம், கோவா அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தியது. முன்னதாக கோவா தனது முதல் ஆட்டத்தில் வெற்றியும், பெங்கால் தனது முதல் ஆட்டத்தில் தோல்வியும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....