Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு2023 ஆம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறைகள் இதோ..!

    2023 ஆம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறைகள் இதோ..!

    2023 ஆம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை நாட்கள் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

    2022 ஆம் ஆண்டு நிறைவு பெற சுமார் 3 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், வருகிற 2023 ஆம் ஆண்டு அரசு விடுமுறை நாட்களுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

    தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு பிறப்பித்திருக்கும் அந்த விடுமுறை பட்டியலில், வரும் 2023 ஆம் ஆண்டு 24 நாட்கள் மட்டுமே அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    அதே சமயத்தில், அடுத்த ஆண்டு அரசு பொது விடுமுறையான 24 நாட்களில் தீபவாளி உட்பட 8 விடுமுறை நாட்கள், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகின்றன. 

    விடுமுறை பட்டியலில் அடுத்த ஆண்டின் முதல் நாளே அதவாது புது வருடத்தின் முதல் நாளே ஞாயிற்றுக்கிழமையன்று தான் வருகிறது. 

    பொங்கல், விநாயகர் சதுர்த்தி, ஏன்? தீபாவளி என முக்கிய பண்டிகைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    மேலும், 2023 ஆம் ஆண்டின் கடைசி (24-வது) விடுமுறையாக டிசம்பர் 25 ஆம் அதே கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகை இடம்பெற்றுள்ளது.

    இதையும் படிங்க:விஸ்வரூபம் எடுக்கும் சின்னத்திரை நடிகை திவ்யா-அர்னவ் விவகாரம்; போலீஸின் அடுத்த கட்ட மூவ் என்ன?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....