Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்மேலும், 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறாதா மெட்டா?

    மேலும், 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறாதா மெட்டா?

    மெட்டாவில் பணியாற்றி வருகிற 10,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    முகவலைதளம், வாட்சப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றின் தாய் நிறுவனமான மெட்டா தங்கள் நிறுவனத்தின் பெரும்பாலான ஊழியர்களை கடந்த நவம்பர் மாதம் பணிநீக்கம் செய்த நிலையில், மீண்டும் பணிநீக்க நடவடிக்கையை மெட்டா நிறுவனம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    மெட்டா நிறுவனம் கடந்த 2022 நவம்பர் மாதத்தில் மேற்கொண்ட பணிநீக்கத்தில் 11,000 ஊழியர்கள் நீக்கப்பட்டனர். ஆனால் இம்முறை இதை விடவும் அதிகமானவர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

    மெட்டா நிறுவனம் தனது நிர்வாகத்தினை சீர்செய்யும் நடவடிக்கையாக, அவசியம் இல்லாமல் இருக்கும் குழுக்களை நீக்கும் நடவடிக்கையில் ஏற்கெனவே ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்நிலையில், தற்போது 10,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    விளம்பர வருவாயில் சரிவைக் கண்டுள்ள மெட்டா நிறுவனம் “மெட்டாவேர்ஸ்” என்ற விர்ச்சுவல் ரியாலிட்டி தளத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    ‘இதுதான் எனது பெஸ்ட்’ – அனிருத் உணர்ச்சிவசம்; வெளிவந்த தகவல்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....