Wednesday, March 20, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்கமல்ஹாசனோடு இணைகிறாரா பிரதீப் ரங்கநாதன்?

    கமல்ஹாசனோடு இணைகிறாரா பிரதீப் ரங்கநாதன்?

    விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் இணையும் இப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

    இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்திலும், நடிப்பிலும் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம்தான், லவ் டுடே. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த இப்படத்தில் சத்யராஜ், இவானா, ராதிகா, ரவீனா ரவி, யோகிபாபு உட்பட பலர் நடித்திருந்தனர்.

    டிரைலர், பாடல்கள் என எல்லாமும் இளைஞர்களிடையே பெரிய கவனத்தைப் பெற்ற நிலையில் படமும் மிகப்பெரிய கவனத்தை பெற்றது. வசூலிலும் லவ்-டுடே ரூ.100 கோடி வசூல் செய்து அனைவரையும் வியப்படையச் செய்தது. 

    திரையரங்குகளில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்த இப்படத்தின் 100-வது நாள் விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் அனைவரின் பேச்சும் ரசிகர்களை கவர்ந்தது. சமீபத்தில் வெளிவந்த மேக்கிங் வீடியோவும் ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது. 

    இந்நிலையில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. வி்கனேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கவிருந்த படம் கைவிடப்பட்ட நிலையில், இம்முடிவை விக்னேஷ் சிவன் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    மேலும், விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் இணையும் இப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

    ‘இதுதான் எனது பெஸ்ட்’ – அனிருத் உணர்ச்சிவசம்; வெளிவந்த தகவல்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....