Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஸ்டீவ் ஸ்மித் அல்லது கம்மின்ஸ்? - இந்தியாவுக்கு எதிராக யார் கேப்டன்?

    ஸ்டீவ் ஸ்மித் அல்லது கம்மின்ஸ்? – இந்தியாவுக்கு எதிராக யார் கேப்டன்?

    இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். 

    ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாட வந்த ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரை விளையாடி முடித்துள்ளது. இத்தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றிப்பெற்றது. 

    இதைத்தொடர்ந்து, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மார்ச் 17 முதல் தொடங்குகிறது. ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய கேப்டனாக பேட் கம்மின்ஸ் அறிவிக்கப்பட்டிருந்தார். பிறகு அவருடைய தாயாருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடைசி இரு டெஸ்டுகளில் விளையாடாமல் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பினார் கம்மின்ஸ். 

    இந்நிலையில், கடந்த வாரம் கம்மின்ஸின் தாய் மரியா காலமானார். இதையடுத்து ஒருநாள் தொடரில் இருந்தும் கம்மின்ஸ் விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது, இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். கடைசி இரு டெஸ்டுகளிலும் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்  செயல்பட்டார். 

    மேலும், இதற்கு முன்பு ஆஸ்திரேலிய அணிக்காக 51 ஒருநாள் ஆட்டங்களில் கேப்டனாகப் ஸ்டீவ் ஸ்மித் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    ‘இதுதான் எனது பெஸ்ட்’ – அனிருத் உணர்ச்சிவசம்; வெளிவந்த தகவல்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....