Tuesday, May 7, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புஉதவி மருத்துவர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியீடு...

    உதவி மருத்துவர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியீடு…

    அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 1021 உதவி மருத்துவர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிவந்தது. 

    தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 1021 உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு எம்பிபிஎஸ் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. 

    தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் 1021 மருத்துவர்கள், செவிலியர்கள், 889 மருந்தாளுநர்கள், டெக்னீஷியன்கள் என 4308 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க:ப்ளீஸ் செல்லம்…நாளைக்கு லீவ் விடுங்க..ஆட்சியரிடம் கெஞ்சிய மாணவர்கள்…!

    இவற்றின் முதல்கட்டமாக 889 மருந்தாளுநர்களை நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 1021 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை எம்ஆர்பி வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த காலி பணியிடங்களுக்கு 74 இடங்கள், எஸ்.டி பிரிவினருக்கு 4 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

    மேலும், இந்த உதவி மருத்துவப் பணியிடங்களுக்கு www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 25-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதைத்தொடர்ந்து, கணினிவழி எழுத்துத் தேர்வு நவம்பர் மாதம் நடைபெறும். 

    இந்த தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி. எஸ்.சி.ஏ. எஸ்.டி. மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.500, மற்றவர்களுக்கு ரூ.1,000 விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு, ஊதியம், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வழிமுறை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....