Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகலை கட்ட தொடங்கியுள்ள தீபாவளி; அரசு பேருந்துகளில் ஒரு லட்சம் பேர் முன்பதிவு!

    கலை கட்ட தொடங்கியுள்ள தீபாவளி; அரசு பேருந்துகளில் ஒரு லட்சம் பேர் முன்பதிவு!

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து 21, 22, 23 ஆகிய 3 நாட்களுக்கும் சுமார் 1 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகிறார்கள். இதனால், பொதுமக்கள் பேருந்துகளில் முன்கூட்டியே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவும் திட்டமிடுவது வழக்கம். 

    அந்த வகையில் கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி தீபாவளி பண்டிகைக்கான அரசு விரைவு பேருந்து பயணசீட்டு முன்பதிவு தொடங்கியது. 

    இந்நிலையில், அக்டோபர் 7 ஆம் தேதி அரசு பேருந்துகளில் தீபாவளி பண்டிகை முன்பதிவு 50 ஆயிரத்தை எட்டியது. 

    இதைத்தொடர்ந்து, தற்போது சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து 21, 22, 23 ஆகிய 3 நாட்களுக்கும் சுமார் 1 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதையும் படிங்க:இஸ்லாமாபாத்தை ‘டார்கெட்’ செய்யும் தலிபான்கள்; பாகிஸ்தானுக்கு பகிரங்க எச்சரிக்கை

    இதுகுறித்து, அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்ததாவது:

    அரசு விரைவு பேருந்துகளுக்கான முன்பதிவு கிட்டத்தட்ட நிறைவு கட்டத்தை நெருங்கி விட்டது. 21, 22, 23 ஆகிய 3 நாட்களுக்கும் சுமார் 1 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். 

    அரசு விரைவு பேருந்துகளுக்கான முன்பதிவு முடிந்தவுடன், பிற போக்குவரத்து கழக பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கும். கடைசி 3 நாட்கள் மற்ற பேருந்துகள் முன்பதிவு கொண்டு வரப்படும். இந்த ஆண்டு முன்பதிவு வசதி பேருந்துகள் அளவைவிட ,முன்பதிவு இல்லாத பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகின்றன. 

    வெளியூர் செல்லக்கூடிய பயணிகள் முன்கூட்டியே பயணத்தை தொடர வேண்டும். நள்ளிரவில் வருவதை தவிர்க்க வேண்டும். ‘பேருந்து இல்லை’ என்று சொல்லாத அளவிற்கு கூடுதலாக பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

    கோயம்பேடு மார்க்கெட், தாம்பரம், பூந்தமல்லி உள்ளிட்ட முக்கிய பேருந்து நிலையங்களில் கடைசி நேர முன்பதிவு டிக்கெட் கவுண்டர்கள் 20 ஆம் தேதி திறக்கப்படும். அங்கு நேரடியாக சென்று முன் பதிவு பயணசீட்டுகளை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்படுகிறது. 

    இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....