Saturday, March 16, 2024
மேலும்
    Homeசமூக வலைதளம்ப்ளீஸ் செல்லம்...நாளைக்கு லீவ் விடுங்க.. ஆட்சியரிடம் கெஞ்சிய மாணவர்கள்...!

    ப்ளீஸ் செல்லம்…நாளைக்கு லீவ் விடுங்க.. ஆட்சியரிடம் கெஞ்சிய மாணவர்கள்…!

    புதுக்கோட்டையில் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி பெய்த மழையின் காரணமாக, மாணவர்கள் அனுப்பிய இன்ஸ்டாகிராம் குறுஞ்செய்திகளால் நனைந்துள்ளார் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு. 

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருப்பவர் கவிதா ராமு. இவர் ஆட்சி நிர்வாகப் பணியுடன் நடனத்திலும், சமூக ஊடகத்திலும் தீவிரமாக செய்லபடுவர் ஆவார். 

    இந்நிலையில், கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி இன்ஸ்டாகிராம் கணக்கின் நேரடி செய்தியின் வாயிலாக மாணவர்கள், திங்கள்கிழமை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.    

    அப்படி அவர்கள் செய்த குறுஞ்செய்திகளை கவிதா ராமு தனது முக நூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

    உங்களையே நம்பி இருக்கேன் மேம்.. ப்ளீஸ் மேம் லீவ் மட்டும் விடுங்க மேம் உங்களுக்கு கோயில் கட்டுறேன் என் மனசுல.. படிச்சு படிச்சு பைத்தியம் புடிக்குற மாறி இருக்கு மேம்… ப்ளீஸ் மேம்… என கோரிக்கைகளை அடிக்கி வைத்துள்ளனர். இந்தச் செய்திகள் அதிகமாக தற்போது பகிரப்பட்டு வருகிறது. 

    இதையும் படிங்க: கூடுதல் விலை கொடுத்து பால் வாங்க வேண்டிய கட்டாயம் – தி.மு.க. தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது ?

    இதனிடையே, அவர்கள் குறிப்பிட்ட கடந்த திங்கள்கிழமை அக்டோபர் 10 ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டதும், விடுமுறை விடும்போது மழை காணாமல் செல்வது போல, அன்றைய தினம் மழை பெய்யாமல் வெயில் அடித்ததும்  குறிப்பிடத்தக்கது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....