Monday, May 6, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்பருவ நிலை மாற்றத்தினால் அழிவினை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் கடற்பஞ்சுகள்..

    பருவ நிலை மாற்றத்தினால் அழிவினை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் கடற்பஞ்சுகள்..

    நியூஸிலாந்து கடற்கரைப் பகுதிகளில் இருக்கும் கடற்பஞ்சுகள் அபாயகரமான வேகத்தில் அழிந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. கடல் நீரின் வெப்பநிலை உயர்வதால் இந்த நிகழ்வு நடந்துள்ளது என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

    வெல்வெட் மற்றும் காப்பி நிறக்கலவையில் தோற்றம் அளித்த கடற்பஞ்சுகளில் பெரும்பாலானவை வெள்ளை நிறத்திற்கு மாறியுள்ளன. இதுவரை வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட கடற்பஞ்சு அழிவுகளில் இதுவே மிக மோசமானது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

    நியூஸிலாந்தின் விஞ்ஞானிகள் மே மாதத்தில் நடத்திய ஆராய்ச்சியின் போது இந்நிகழ்வு நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட பல மில்லியன் கணக்கான கடற்பஞ்சுகள் தங்களது நிறத்தினை இழந்து வெள்ளை நிறத்திற்கு மாறியுள்ளன.

    இந்த ஆராய்ச்சியினை நடத்திய குழுவிற்கு தலைமை வகித்த பெல் என்பவர் பெரிய பரப்பளவில் கடற்பஞ்சுகள் அழிந்துள்ளன. இருப்பினும் குறைந்த அளவு கடற்பஞ்சுகள் இன்னும் தங்களது நிறத்தினை இழக்காமல் உள்ளது. மேலும், அவை ஆக்ஸிஜனையும் வெளியிடுகின்றன. என்று கூறியுள்ளார்.

    ‘இந்த பகுதியானது மனிதர்களால் மாசுபடுத்தப்படாத பகுதியாக இருந்துள்ளது. முதல் முறையாக இங்கு வந்தபோது இந்த இடமானது ஒரு வெள்ளை நிறத்திலுள்ள மயானம் போலக் காணப்பட்டது. இது மிகவும் கொடுமையான நிகழ்வு, பெரும்பாலான கடற்பஞ்சுகள் மிகவும் ஆரோக்கியமற்று உள்ளன.’ என்று பெல் குறிப்பிட்டுள்ளார்.

    கடற்பஞ்சுகள்..

    கடற்பஞ்சுகள் பல்வேறு விதமான வடிவங்களில், பல்வேறு விதமான நிறங்களில் காணப்படுகின்றன. கடல் உலகத்தினைப் பொறுத்தவரையில் இந்த கடற்பஞ்சுகள் மிக முக்கியமான பங்கினை வகிக்கின்றன.

    சிறிய கடல்வாழ் உயிரினங்களான நண்டுகள், பாசிகள், மீன்கள் போன்றவைகளுக்கு உணவாகவும், தங்குமிடமாகவும் கடற்பஞ்சுகள் உதவுகின்றன. கடலிலுள்ள சிறு சிறு உயிரிகள், பாக்டீரியா போன்றவைகளை உணவாக உட்கொள்ளும் இவை கடல்வாழ் உயிரினங்களுக்குத் தேவையான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்வதில் பெரும்பங்காற்றுகின்றன.

    வேகமாக உயரும் கடல்நீரின் வெப்பநிலை..

    மூன்று வருடங்கள் தொடர்ச்சியாக கடல்நீரின் வெப்பநிலையானது பெருமளவு அதிகரித்து வந்துள்ளது. இது கடல்வாழ் உயிரினங்களுக்கு மற்றொரு பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

    சென்ற வருடம், ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பவளப்பாறைகள் காணப்படும் பகுதியான ‘தி கிரேட் பாரியர் ரீஃப்’ எனப்படும் பகுதியில் ஆறாவது முறையாக பெருமளவு பவளப்பாறைகள் தங்களது நிறத்தினை இழந்துள்ளன.

    மேலும், 1990ம் ஆண்டிலிருந்து பார்க்கையில் சுமார் 3,44,00 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த பகுதியில் பாதிக்கும் அதிகமான பவளப்பாறைகள் அழிந்துள்ளன என்பது அதிர்ச்சியான செய்தியாகும். கடந்த முப்பது ஆண்டுகளாக ஏற்பட்ட பருவநிலை மாற்றமே இதற்கு காரணமாகக் கருதப்படுகிறது.

    கடலினைப் பொறுத்தவரையில் பவளப்பாறைகள், உயிரி மண்டலமாகவும், சூழலியல் மண்டலமாகவும் கருதப்படுகிறது. இந்த பவளப்பாறைகளை ஏராளமான கடல்வாழ் உயிரினங்கள் தங்களது உணவிற்காகவும், இனப்பெருக்கத்திற்காகவும், வாழிடத்திற்காகவும் சார்ந்துள்ளன. பவளப்பாறைகளின் அழிவு என்பது கடல்வாழ் உயிரினங்களுக்கு ஒரு பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    அழிந்து வரும் கடற்பிஞ்சுகளையும், பவளப்பாறைகளையும் எந்த வித நேரவிரயமும் செய்யாமல் பாதுகாக்கவேண்டிய நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என்பதே ஆராய்ச்சியாளர்களின் எண்ணமாக உள்ளது.

    உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000; தகுதி மற்றும் விவரங்கள் உள்ளே!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....