Sunday, March 17, 2024
மேலும்
    Homeசமூக வலைதளம்வாட்ஸ் அப்பில் பெண்களுக்கான புதிய அப்டேட்: இனி பீரியட் டேட் என்னனு யோசிக்க வேண்டாம்!

    வாட்ஸ் அப்பில் பெண்களுக்கான புதிய அப்டேட்: இனி பீரியட் டேட் என்னனு யோசிக்க வேண்டாம்!

    வாட்ஸ் அப் நிறுவனம், பெண்களுக்கான புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. வாட்ஸ் அப் நிறுவனமானது வாட்ஸ் அப் செயலியில் புதுப் புது மாறுதல்களை பயனர்களுக்கு ஏற்றவகையில் அறிமுகப்படுத்திக் கொண்டு வருகிறது. அந்த வகையில், பெண்களுக்கென பிரத்யேகமாக பீரியட் டிராக்கரை (மாதவிடாய் கண்காணிப்பு) உருவாகியுள்ளது. சிரோனா ஹைஜின் என்ற நிறுவனத்துடன் சேர்த்து இதனை வாட்ஸ் அப் உருவாக்கியுள்ளது. இதைப் பயன்படுத்தி, பெண்கள் தங்கள் மாதவிடாய் சுழற்சியை கண்காணிக்க முடியும். 

    இதற்கு என்ன செய்ய வேண்டும்? 

    • 9718866644 என்ற எண்ணில் இருக்கும் சிரோனா வாட்ஸ் அப் வணிகக் கணக்கிற்கு ‘ஹாய்’ என்று மெசேஜ் அனுப்ப வேண்டும். (இதன்மூலம் உங்கள் மாதவிடாய் சுழற்சியின் காலங்களைத் தெரிந்துக் கொள்ளலாம்.)
    • மேலும் சிரோனா, மாதவிடாய் சம்பந்தப்பட்ட தனிப்பட்ட விவரங்களை கேட்டு அறியும். 
    • பிறகு, பீரியட் டிராக்கர் என்று தேர்வு செய்ய வேண்டும்.
    • முதலில் பெண்கள் தங்களது மாதவிடாய் காலங்கள் மற்றும் தங்களது மாதவிடாய் கடைசித் தேதியை, சிரோனா வணிகக் கணக்கில் உள்ளிட வேண்டும்.
    • அனைத்தும் கேட்டறிந்து முடிந்தவுடன், அடுத்த மாதவிடாய் எப்போது, கருமுட்டை உருவாக்கம் மற்றும் கருவுறுவாவதற்கான வாய்ப்பு அதிகமிருக்கும் நாட்கள் உள்ளிட்டவைகளை சிரோனா விரிவாகக் காட்டும்.

    மாதவிடாய் வரும் தேதியை நினைவூட்டுதல் மற்றும் சுழற்சி தேதிகள் வாட்ஸ் அப் மூலம் பகிரப்படும். மேலும், இந்த பீரியட் டிராக்கர் வணிக வாட்ஸ் அப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும், உள்ளுணர்வு சாட்பாட் கொண்ட அமைப்பு, மென்மையுடனும் பொழுதுபோக்குடனும் உருவாக்கப்பட்டுள்ளது.  

    உள்ளூர் பானங்களை அருந்துங்கள்.. பொருளாதாரத்தினை உயர்த்த பாகிஸ்தான் முயற்சி..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....