Friday, March 15, 2024
மேலும்
    Homeசமூக வலைதளம்சிங்கக் குட்டிக்கு ஃபிடிங் பாட்டில் மூலம் பால் வழங்கும் மனிதர்; வைரலான வீடியோ!

    சிங்கக் குட்டிக்கு ஃபிடிங் பாட்டில் மூலம் பால் வழங்கும் மனிதர்; வைரலான வீடியோ!

    இயற்கையின் அழகை ரசிக்க எந்த ஒரு மனிதனுக்கும் தனது வாழ்நாள் போதாது. இயற்கை வெறுமனே அழகியல் அல்லாது பல அபூர்வங்களை தன்னுள் அடக்கியது. அன்றாடம் நம் கண்ணில் படும் தாவரங்கள், விலங்ககுள், பறவைகள், பூச்சியினங்கள் என ஒவ்வொன்றுமே ஒவ்வொரு வித அழகு. இயற்கையின் படைப்புகளில் எந்தளவிற்கு அழகு உள்ளதோ அதே அளவிற்கு ஆபத்தும் உள்ளது. விலங்குகளை எடுத்துக்கொண்டாலே அது புரிந்துவிடும். மானை எளிதாக வீழ்த்தும் மனித இனம், சிங்கம் என்று வரும்போது நடுங்கும். ‘பாம்பு என்றால் படையும் நடுங்கும்’ என்பது இன்றளவும் உபயோகிக்க கூடிய பழமொழி. அதேபோல ‘ பிள்ளை மனம் ஏதுமறியாது’ என்ற பழமொழியும் இன்றளவும் உபயோகிக்க கூடிய ஒன்றே. 

    மேலே சொன்ன இந்த இரு பழமொழியும் ஒத்திசையக்கூடிய ஒரு சம்பவம்தான் தற்போது நடைபெற்றுள்ளது. அதாவது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளிவந்து வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் சிங்கக் குட்டி ஒன்றுக்கு மனிதர் ஒருவர் ஃபிடிங் பாட்டில் உதவியுடன் பால் வழங்குகிறார். தனது ஒரு கையால் சிங்கக் குட்டியை பிடித்துக்கொண்டும், மற்றொரு கையால் பால் வழங்கிக்கொண்டும் இருக்கிறார். பாம்பை கண்டு நடுங்காதவர்கள் கூட சிங்கத்தை கண்டால், அதன் கர்ஜனையை கேட்டால் நடுங்கிவிடுவர். 

    ஆனால், இங்கோ இவர் சிங்கக் குட்டிக்கு எந்தவித அச்ச உணர்வும் இல்லாமல், வெகு இயல்பாக உணவளிக்கிறார். குட்டியும் மிகவும் சமத்தாக பாலை அருந்துகிறது. தற்போது இந்த வீடியோவானது சமூகவலைதளத்தில் அதிக நபரால் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ சார்ந்து, பலரும் பல கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

    ‘அழகிய பூனைப்போல சமத்தாக உள்ளது’, ‘சிங்கத்துக்கா பாலூட்டி வளர்க்கிறீர்கள்’, ‘சீக்கிரம் காட்டுக்குள்ள விட்டுடுங்க’..போன்ற கருத்துகளும் இடம்பெற்றுள்ளன. 

    நாட்டில் வேளாண், உணவு பொருள்களின் ஏற்றுமதி 25 சதவீதம் அதிகரிப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....