Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ஆளுநருக்கு எதிராக கூட்டணி கட்சிகளை திரட்டி குடியரசு தலைவரிடம் மனு! திமுகவின் திட்டம் பலிக்குமா?

    ஆளுநருக்கு எதிராக கூட்டணி கட்சிகளை திரட்டி குடியரசு தலைவரிடம் மனு! திமுகவின் திட்டம் பலிக்குமா?

    ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்க திமுக சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

    தற்போது தமிழக ஆளுநராக செயல்பட்டு வரும் ஆர்.என்.ரவி தமிழக அரசின் முடிவுகளுக்கும் செயல்பாடுகளுக்கும் தடையாக இருப்பதாக, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. 

    குறிப்பாக, நீட் மசோதா கொண்டுவரப்பட்டு அது, ஆளுநருக்கு அனுப்பியும் அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லை என்பது முதல் குற்றச்சாட்டாக வைக்கப்டுகிறது. மேலும் பல மசோதாக்களை அவர், இவ்வாறு கிடப்பில் போட்டு வருகிறார். 

    அதேபோல், ஆளுநர் ஆர்.என்.ரவி பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது ஆன்மிகம் சார்ந்த கருத்துக்களையே கூறுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. 

    இதனிடையே, தமிழக ஆளுநரை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தும் வகையில் ஒரே கருத்துடன் கூடிய கடிதத்தை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர்களுக்கு அனுப்ப உள்ளனர்.

    இதுகுறித்து நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு விடுத்துள்ள அழைப்பில், 

    “ஒரே எண்ணம் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, 

    தமிழக ஆளுநரை உடனடியாக வாபஸ் பெறுவது தொடர்பாக, குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் கடிதத்தில் அண்ணா அறிவாலய தலைமையகத்திற்கு நேரில் சென்று படித்து கையொப்பமிடுமாறு திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என தெரிவித்துள்ளார். 

    இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று தில்லி செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.

    பேரணிக்கு செக் வைத்த காவல்துறை..! அனுமதி கிடைக்குமா? கிடைக்காதா? குழப்பத்தில் ஆர்.எஸ்.எஸ்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....