Friday, March 15, 2024
மேலும்
    Homeவாழ்வியல்ஆரோக்கியம்வலியின் மொழி : மையோசைட்டிஸ் பற்றி அறிவோம்..! குணப்பபடுத்தக் கூடிய நோய்தானா?

    வலியின் மொழி : மையோசைட்டிஸ் பற்றி அறிவோம்..! குணப்பபடுத்தக் கூடிய நோய்தானா?

    நமது உடல் அசைவுகளுக்கு ஆதாரமாக இருப்பது தசைகளும், மூட்டுகளும்தான். இவற்றில் ஏதேனும் ஒன்று பாதிக்கப்பட்டால் கூட நமது அன்றாட பணிகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு அப்படியே முடக்கி போட்டுவிடும். பொதுவாக ஒருவருக்கு தசை வலிகள் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லபப்டுகின்றன.

    அப்படிப்பட்ட சூழலில் ‘மையோசைட்டிஸ் ‘ என்ற புதிய வகை தசை பிடிப்பு நோய் குறித்த செய்திகள் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது. அதற்கு காரணம் நடிகை சமந்தா. இவர் தற்போது ‘மையோசைட்டிஸ் ‘ என்ற தசை பிடிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

    இது காலம் காலமாக உள்ள நோய்தான் என்றாலும், சமந்தாவிற்கு வந்த பிறகுதான் பலராலும் இந்த நோய் குறித்து அதிகமாக பேசப்படுகிறது. இது என்ன மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நோயா? இதற்கு மருத்துவ உலகில் என்ன மாதிரியான தீர்வுகள் இருக்கின்றன.. போன்ற பல விஷயங்களை மக்கள் இன்று ஆராய ஆரம்பித்துள்ளனர். அதுகுறித்த தகவல்களைதான் நாம் இங்கு காண இருக்கிறோம்.

    Myositis Diagnosis & Treatment | Mount Sinai - New York

    மையோசைட்டிஸ் என்றால் என்ன?

    ‘மையோசைட்டிஸ்’ என்பது ஒரு வகையான தசை பிடிப்பு நோய் ஆகும். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை தசை செல்களுக்கு எதிராகச் செயல்பட வைக்கும். இதற்கு மயோசைட்டிஸ் அதவாது தசை அழற்சி என்று பெயர். 

    இந்த நோய் யார் யாருக்கு வரும்?

    இந்த நோய் சிரியவர்கள் முதல் பெரியர்வர்கள் வரை ஆண், பெண் வித்தியாசமின்றி வரக்கூடியது. இதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு அதிகமாக வருவதாக கூறப்படுகிறது. 

    தசை அழற்சி நோயின் வகைகள்:

    இந்த நோய் இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றன. இந்த இரண்டு வகைளிலும் பல்வேறு பிரிவுகள் காணப்படுகின்றன.

    1. தோல் பாதிப்புடன் கூடிய தசை அழற்சி நோய்
    2. தோல் பாதிப்பற்ற தசை அழற்சி நோய் 

    Management of Inflammatory Myositis: Options for Refractory Disease & New Therapies Discussed - The Rheumatologist

    தசை அழற்சி நோய் வருவதற்கான காரணங்கள்:

    இந்தநோய் வருவதற்கான முக்கிய மற்றும் ஆராய்ச்சி ரீதியாக எந்த காரணங்களும் நீருபிக்கப்படவில்லை. சிலர் இது மரபணு நோய் என்றும் சிலர் வைரஸ் தொற்றால் ஏற்படலாம் என்றும் கூறுகின்றனர். இருப்பினும் இந்த தசை அழற்சி நோய்க்கான சரியான காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. 

    தசை அழற்சி நோயின் அறிகுறிகள் என்ன?

    பொதுவாக இந்த நோய் ஒவ்வொருவருக்கும் வேறுபட்ட அறிகுறிகளை காட்டுகிறது. அதில் பொதுவான சிலவை, தசைகளில் வீக்கம், காய்ச்சல், உடல் சோர்வு, மூச்சு திணறல், தோளில் சிவந்த தடிப்பு, மார்பகத்தில் சிவந்த தடிப்புகள், தசைகளில் அதிக வலி உள்ளிட்டவை கூறப்படுகின்றன. 

    இந்த நோயால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? 

    இந்த தசை அழற்சி நோயினால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படலாம். மேலும் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும். சிலருக்கு தசைகள் வீக்கத்தினால் நடக்க முடியாத நிலை கூட உருவாகலாம். 

    இந்த நோய் வருபவர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இந்த பாதிப்புகள் தான் வரும் என்று அறியமுடியவில்லை. 

    Inclusion body myositis: current pathogenetic concepts and diagnostic and therapeutic approaches - The Lancet Neurology

    இதற்கு மருந்து ஏதேனும் இருக்கிறதா?

    இந்த தசை அழற்சியால் ஏற்படக்கூடிய உடல் உபாதைகளுக்கு தனித்தனியே மருந்துகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக இந்த நோய்க்கு என்று தனி மருந்துகள் எதுவும் கண்டறியப்படவில்லை. இந்நோயின் ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்துவிட்டால் எளிமையாக குணப்படுத்த முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

    ‘மையோசைட்டிஸ்’ நோய் பாதிப்பு விகிதம் மற்றும் இலவச சிகிச்சைகள்:

    இந்நோயின் பாதிப்பு விகிதத்தை பார்க்கும் போது ஒரு லட்சம் பேரில் 22 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்படலாம் என்று மருத்துவ தரப்பில் கூறப்படுகிறது .இப்படி குறைந்த பேருக்கு வரக்கூடிய நோய் பாதிப்பு என்றாலும் இந்நோய் சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் செலவாகுமாம்.அதிலும் இந்த நோய்க்காக வழங்கப்படும் மருந்துகளுக்கு மட்டுமே ஒரு நாளைக்கு 50,000 வரை செலவாக வாய்ப்புள்ளதாம். ஆனால் அதே அரசு மருத்துவமனைகளில் ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து வருபவர்களுக்கு இந்த நோய்க்கென்று இலவசமாக சிகிச்சைகளும்,மருந்துகளும் வழங்கப்படுகின்றன.

    சமீபத்தில் நடிகை சமந்தாவிற்கு இந்த நோய் வந்ததனால் ,இதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி அனைவரும் தேடி வருகின்றனர். உண்மையில் இது பெரிய பாதிப்பில்லை. இருப்பினும் முன்னதாகவே கண்டறிவது நல்லது. 

    இதையும் படிங்க:  பேரணிக்கு செக் வைத்த காவல்துறை..! அனுமதி கிடைக்குமா? கிடைக்காதா? குழப்பத்தில் ஆர்.எஸ்.எஸ்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....