Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஜாதி சான்றிதழ் கிடைக்காததால் நீதிமன்ற வளாகத்தில் தற்கொலை...நீதிபதி எடுத்த முடிவு!

    ஜாதி சான்றிதழ் கிடைக்காததால் நீதிமன்ற வளாகத்தில் தற்கொலை…நீதிபதி எடுத்த முடிவு!

    சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக, உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.

    நேற்று முன்தினம் மதியம் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்கு வந்தவர், தான் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி நீதிமன்ற வளாகத்திலேயே தீக்குளித்தார்.

    இதைத்தொடர்ந்து, உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் அந்த நபர் கூச்சலிட்டு ஓடியுள்ளார். இதனைக் கண்ட  நீதிமன்ற வளாகத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக நீதிமன்றவளாக பாதுகாப்பு பிரிவு உதவி ஆய்வாளர் தினகரன் மற்றும் அங்கு இருந்த வழக்கறிஞர்கள் போர்வையால் தீயை அணைத்து ஆம்புலன்ஸ் மூலம் கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அந்த நபரை அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலினின்றி உயிரிழந்தார். பின்னர் விசாரித்ததில் அவர் வேல்முருகன் என்றும், ஜாதி சான்றிதழ் கிடைக்காததால் தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

    இந்நிலையில், நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கு, ஜாதி சான்றிதழ் கிடைக்காததால், தற்கொலைக்கு முயற்சித்து, மருத்துவமனையில் இறந்து விட்டதாக நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

    இதையும் படிங்க: ஹிஜாப் வழக்கு; நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால் பரபரப்பு..!

    இதையடுத்து, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு:

    நரிக்குறவர் ஜாதி சான்றிதழ், வேல்முருகனின் மகனுக்கு கிடைக்கவில்லை. ஜாதி சான்றிதழ் கேட்டு வரும் விண்ணப்பங்களின் மீது, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை, அலைய விடக் கூடாது. ஜாதி சான்றிதழ் வழங்குவதில், பலமுறைகேடுகள் நடப்பதாகவும், நீதிமன்றத்தின் கவனத்துக்கு வந்துள்ளது. ஜாதி சான்றிதழ், அரசின் சலுகைகளை பெறுவதற்கு தேவைப்படும் முக்கிய ஆவணம். அது கிடைக்காமல் விரக்தி அடைந்து, வேல்முருகன் தற்கொலை செய்துள்ளார்.

    ஜாதி சான்றிதழ் பெறுவதில், வேல்முருகன் மற்றும் அவரது மகனின் உரிமை மீறப்பட்டதா என்பதை, நீதிமன்றம் ஆய்வு செய்ய வேண்டும். எனவே, சம்பவம் தொடர்பாக தானாக வழக்கை விசாரணைக்கு எடுக்க, இந்த நீதிமன்றம் விரும்புகிறது. இதற்கு பதில் அளிக்க, வருவாய் நிர்வாக கமிஷனர், காஞ்சிபுரம் கலெக்டர் ஆகியோர் வழக்கில் சேர்க்கப்படுகின்றனர்.

    என்று தெரிவித்தார். 

    முன்னதாக, தீக்குளித்த வேல்முருகன் “தனக்கும், தனது சமூகத்தினருக்கும் தமிழகம் முழுவதும் ஜாதி சான்றிதழ் கிடைக்கவில்லை” என பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க:அதிகளவில் வெளிவந்த நியாய விலைக்கடை விற்பனையாளர் பணிக்கான அறிவிப்பு…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....