Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு'இனி ஒரு தற்கொலை நிகழக்கூடாது' - மலைகுறவர் தற்கொலை குறித்து ராமதாஸ் கருத்து!

    ‘இனி ஒரு தற்கொலை நிகழக்கூடாது’ – மலைகுறவர் தற்கொலை குறித்து ராமதாஸ் கருத்து!

    பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்குவதற்கான நடைமுறைகளை எளிமையும், செம்மையும் படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

    சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில், மலைகுறவர் சமுதாயத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்ற இளைஞர் பழங்குடியினர் சாதி சான்றிதழ் கிடைக்காத மன உளைச்சலில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். வேல்முருகனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ராமதாஸ் ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: செல்வராகவன் – மோகன்.ஜி கூட்டணியில் உருவாகிவரும் ‘பகாசூரன்’ திரைப்படத்தின் புகைப்படங்கள்!

    இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

    கடந்த 100 நாட்களில் பழங்குடியினர் சாதி சான்றிதழ் கிடைக்காததால் நிகழ்ந்துள்ள இரண்டாவது தற்கொலை இதுவாகும். இதற்கு முன் கடந்த ஜூலை 4-ஆம் தேதி கொண்டாரெட்டி சாதி சான்றிதழ் கிடைக்காததால் பெரியசாமி என்ற முதியவர் பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

    கொண்டாரெட்டி, மலைக்குறவர்  ஆகிய இரு சாதிகளும் பழங்குடியினர் பட்டியலில் முறையே 12,23 ஆகிய இடங்களில் உள்ளன. விண்ணப்பித்த ஒரு மாதத்தில் சாதி சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என விதி உள்ள நிலையில், சாதி சான்றிதழ் மறுக்கப்படுவது தான் தற்கொலைகளுக்கு காரணம் ஆகும்.

    பழங்குடியின சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை என்பதற்காக இனியும் ஒரு தற்கொலை நிகழக்கூடாது. இதைக் கருத்தில் கொண்டு பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்குவதற்கான நடைமுறைகளை எளிமையும், செம்மையும் படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    இவ்வாறு தெரிவித்துள்ளார். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....