Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇறுதிக்கட்டத்தை எட்டிய இளம்பெண் ஷ்ரத்தா கொலை வழக்கு; நிம்மதி பெருமூச்சு விட்ட காவல்துறை

    இறுதிக்கட்டத்தை எட்டிய இளம்பெண் ஷ்ரத்தா கொலை வழக்கு; நிம்மதி பெருமூச்சு விட்ட காவல்துறை

    தில்லி இளம்பெண் ஷ்ரத்தா கொலை வழக்கில் முக்கிய திருப்பமாக டிஎன்ஏ சோதனை மற்றும் உண்மை கண்டறியும் சோதனை முடிவுகள் கிடைத்துள்ளன. 

    மராட்டிய மாநிலம், மும்பையைச் சேர்ந்த ஷ்ரத்தா என்ற இளம்பெண் தனது காதலனான அப்தாப் அமீன் பூனாவாலாவுடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தில்லியில் லிவ்வின் முறையில் வசித்து வந்தார். இதனிடையே திடீரென காதலன் அப்தாப் பெண்ணை 35 துண்டுகளாக வெட்டி தில்லியின் பல பகுதிகளில் வீசினார். 

    இதையடுத்து ஷ்ரத்தாவின் தந்தை அளித்த புகாரின் பேரில், காதலன் அப்தாப் அமீன் பூனாவாலா கடந்த மாதம் 10 ஆம் தேதி கைது செய்யப்பட்டு, அவரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே, இந்தச் சம்பவம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    அப்தாப் முன்னுக்கு பின் முரணாக வாக்குமூலம் அளித்து வருவதால் அவரிடம் உண்மைக் கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி அவரிடம் அகாடநத 2 வாரங்களுக்கு முன்பாக சோதனை நடத்தப்பட்ட நிலையில் தற்போது அதன் முடிவுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. 

    மேலும் தில்லி வனப்பகுதியில் கிடைப்பெற்ற 13 எலும்பு துண்டுகளை ஆய்வு செய்ததில் ஷரத்தாவின் தந்தை டிஎன்ஏவுடன் ஒப்பிட்டு பார்த்ததில், ஒரு எலும்பு துண்டின் டிஎன்ஏ  ஷ்ரத்தாவின் டிஎன்ஏவுடன் ஒத்துப்போவதாக மருத்துவ அறிக்கை கிடைக்கப் பெற்றுள்ளது. 

    இதன் காரணமாக, அப்தாப் ஷ்ரத்தாவை கொலை செய்தது உறுதி ஆகி இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. டிஎன்ஏவும் உண்மைக் கண்டறியும் சோதனையும் சவாலாக இருந்த நிலையில் தற்போது இந்த வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது காவல்துறையினருக்கு சற்று நிம்மதியை கொடுத்துள்ளது.

    “இனி நான் சூப்பர்மேனாக நடிக்க இயலாது” – விடைபெறும் ஹென்றி…சோகத்தில் ரசிகர்கள்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....