Tuesday, March 19, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்"இனி நான் சூப்பர்மேனாக நடிக்க இயலாது" - விடைபெறும் ஹென்றி...சோகத்தில் ரசிகர்கள்..

    “இனி நான் சூப்பர்மேனாக நடிக்க இயலாது” – விடைபெறும் ஹென்றி…சோகத்தில் ரசிகர்கள்..

    உலகம் முழுவதுமே சூப்பர் ஹிரோக்கள் திரைப்படத்திற்கு என்று மிகப்பெரிய ரசிக பட்டாளம் உள்ளது. இந்த சூப்பர் ஹிரோ சார்ந்த திரைப்படங்களை உருவாக்குவதில் மார்வெல் மற்றும் டிசி போன்ற தயாரிப்பு நிறுவனங்கள் முன்னிலை வகிக்கிறது. சூப்பர் ஹிரோக்கள் முதலில் காமிக்ஸ் புத்தகங்களின் முதன்மை கதாப்பாத்திரங்களாக இருந்தன. பின்னாளில் இந்த கதாப்பாத்திரங்கள்தான் சூப்பர் ஹிரோ திரைப்படங்களாக உருவெடுத்தன. 

    dc

    மார்வெல் மற்றும் டிசி என்று இரு துருவங்கள் சூப்பர் ஹிரோ சாம்ராஜ்ஜியத்தில் உள்ளன. எப்போதும் இந்த இரு துருவங்களுக்கு இடையே பனிப்போர் நிகழ்ந்த வண்ணம் இருக்கும். நிறுவனங்களுக்குள் மட்டுமல்லாது, ரசிகர்களுக்கு இடையேவும் சமூகவலைதளத்தில் பனிப்போர் நிகழும். மார்வெல் மற்றும் டிசி நிறுவனங்களை அறியாத சூப்பர்ஹிரோ பிரியர்களே இல்லை என்ற அளவுக்கு இந்நிறுவனங்களின் பங்கு என்பது உள்ளது. 

    மார்வெல் நிறுவனத்தின் கீழ் ஸ்பைடர்மேன், கேப்டன் அமெரிக்கா, அயர்ன்மேன், ஹல்க், தோர், பிளாக் விடோ என பட்டியல்கள் நீள.. டிசி நிறுவனத்தின் கீழ் பேட்மேன், சூப்பர்மேன், வோண்டர் வுமேன், அக்குவாமேன் என பட்டியல்கள் நீளும். 

    steve

    இவற்றுள் டிசி தயாரிப்பின் கீழ் வரும் சூப்பர் மேன் கதாப்பாத்திரத்திற்கு பெரும் ரசிக கூட்டமே உள்ளது. இந்த சூப்பர் மேன் கதாப்பாத்திரத்தை அடிப்படையாக கொண்டு உருவான திரைப்படத்தில் கிறிஸ்டோபர் ஸ்டீவ் நடித்திருப்பார். இவர் மிகவும் புகழ்பெற்றார். 

    இவருக்கு அடுத்தபடியாக சூப்பர் மேன் கதாப்பாத்திரத்தில் நடித்து அதிகளவில் பெயரும் புகழும் பெற்றவர்தான், ஹென்றி கவில். 2013-ஆம் ஆண்டு வெளியான “சூப்பர்மேன்: மேன் ஆஃப் ஸ்டீல்” திரைப்படத்தின் மூலம் தனது சூப்பர்மேன் பயணத்தை ஹென்றி தொடங்கினார். சிறியவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை அனைவருக்கும் இவரை பிடித்துப் போக சூப்பர் மேன் பாத்திரத்திற்கு இவர் கனக்கச்சிதம் என்ற பெயரை பெற்றார். 

    பேட்மேன் vs சூப்பர்மேன், ஜஸ்டீஸ் லீக் போன்ற திரைப்படங்களிலும் சூப்பர் மேன் கதாப்பாத்திரத்தில் நடித்து ஹென்றி கவில் அசத்தியிருப்பார். சமீபத்தில் வெளியான ‘பிளாக் ஆடம்’ திரைப்படத்தில் கூட சிறப்பு தோற்றத்தில் ஹென்றி கவில் நடித்து பெயர் பெற்றார். 

    superman

    இந்நிலையில், இனி நான் சூப்பர்மேனாக நடிக்கப்போவதில்லை என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் ஹென்றி கவில் அறிவித்துள்ளது, அவரது ரசிகர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    டிசி-யில் தற்போது பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. திரைத்துறையில் ஏற்கனவே உருவாக்கியுள்ள யூனிவர்ஸை இன்னும் பெரிதாக்கும் முயற்சியில் டிசி நிறுவனம் இறங்கியுள்ளது. கிட்டத்தட்ட அடுத்த பத்து ஆண்டுகளுக்கான திட்டத்தை டிசி நிறுவனம் தற்போது தயார் செய்து வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

    இதனின் ஒரு பகுதியாகவே, ஹென்றி கவிலிடம் டிசி நிறுவனத்தின் தலைவர்கள் ஜேம்ஸ் கன் மற்றும் பீட்டர் சாஃப்ரான் ஆகியோர் சூப்பர்மேன் கதாப்பாத்திரத்தில் இருந்து விலகிக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதன் பெயரிலேயே ஹென்றி கவிலின் இந்த முடிவு இருப்பதாக கூறப்படுகிறது. 

    இதனிடையே, ஹென்றி கவில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிந்துள்ள பதிவில், ‘அனைவருக்கும் ஒரு சோக செய்தி. ஜேம்ஸ் கன் மற்றும் பீட்டர் சாஃப்ரானை தற்போதுதான் சந்தித்தேன். இனி நான் சூப்பர்மேனாக திரும்ப நடிக்க இயலாது’ என்று தெரிவித்துள்ளார். அதோடு, டிசி-அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு வாழ்த்தையும் அவர் தெரிவித்துள்ளார்.

    ‘இவ்வளவு ஆண்டுகளாக என் பக்கம் இருந்தவர்கள்..இந்த நிகழ்வுக்காக சிறிது துயரப்படலாம் ஆனால் அதேசமயம் சூப்பர்மேன் இன்னும் இருக்கிறார் என்பதை நாம் நினைவுகூற வேண்டும். சூப்பர் மேன் எதற்காக போராடினாரோ அது இன்னும் இருக்கிறது. சூப்பர்மேன் கற்றுக்கொடுத்த விஷயங்கள் இன்னும் இருக்கிறது. 

    நான் சூப்பர்மேனாக இருக்கும் காலம் முடிந்திருக்கலாம் ஆனால் சூப்பர்மேனின் காலம் எப்போதும் முடியாது. உங்களுடன் பயணித்தில் மிக்க மகிழ்ச்சி’ என ஹென்றி கவில் தெரிவித்துள்ளார். 

    superman

    சூப்பர்மேன் கதாப்பாத்திரத்தின் மூலம் கடந்த 10 வருடங்களாக பலரின் மனதையும் கவர்ந்த ஹென்றி கவிலின் இன்ஸ்டாகிராம் பதிவு அவரது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    மேலும், டிசி-நிறுவனத்தின் அடுத்தக்கட்டத்தை நோக்கி ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கும் அதே சமயத்தில், ஹென்றி கவிலின் நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    நீதானே என் பொன்வசந்தம்: பத்தாண்டை நிறைவு செய்யும் வருண்-நித்யாவின் காதல் கதை..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....