Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்வாரிசு இசைவெளியீட்டு விழா எப்போது? - வெளிவந்த தகவல்..

    வாரிசு இசைவெளியீட்டு விழா எப்போது? – வெளிவந்த தகவல்..

    வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற டிசம்பர் 24-ம் தேதி நடைபெறுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போகிறது. பொங்கலுக்கு வாரிசு திரைக்கு வருமென்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாரிசு திரைப்படத்தின் புரோமஷன் பணிகள் தொடங்கியுள்ளது. 

    மேலும், வாரிசு திரைப்படத்தில் இருந்து சமீபத்தில் வெளிவந்த ரஞ்சிதமே மற்றும் தீ தளபதி போன்ற பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

    இந்நிலையில், வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற டிசம்பர் மாதம் 24-ம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த விழாவானது தற்போது சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவுப்பும் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர் கணேஷ் வெங்கட்ராம் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கிறிஸ்துமஸிற்கு முந்தைய நாளான டிசம்பர் மாதம் 24-ம் தேதி நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

    52,000-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் அவதார்; காத்திருப்பில் ரசிகர்கள்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....