Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇந்தியாவில் தொடரும் மர்ம கொலைகள்- காரணம் என்ன?

    இந்தியாவில் தொடரும் மர்ம கொலைகள்- காரணம் என்ன?

    நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக கூறி கடந்த மாதம் 28-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் டெய்லர் கண்ணையா லால் என்பவர் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில் இதே விவகாரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மருந்தக உரிமையாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

    மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டம் கோத்வாளி பகுதியில் உமேஷ் பிரஹலாத்ராவ் என்பர் வசித்து வந்தார். இவருக்கு வயது 57. மருந்தகம் ஒன்றை நடத்தி வரும் இவருக்கு சங்கீத் என்ற மகன் உள்ளார். சங்கீத்தின் மனைவி பெயர் வைஷ்ணவி. 

    வழக்கம்போல், ஜூன் மாதம் 21 இரவில் மருந்தகத்தை மூடிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இவரை பின்தொடர்ந்து மகன் சங்கீத், தனது மனைவி வைஷ்ணவியுடன் ஸ்கூட்டரில் சென்றுக்கொண்டிருந்தார். 

    அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று மர்ம நபர்கள் உமேஷ் பயணித்த ஸ்கூட்டரை தடுத்து நிறுத்தினர். மூன்று நபர்களில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி தான் வைத்திருந்த கத்தியை எடுத்து உமேஷ் பிரஹலாத்ராவின் கழுத்தில் குத்திவிட்டு, 3 பேரும் அங்கிருந்து வேகமாகச் சென்றுவிட்டனர்.

    இதனைப் பார்த்த சங்கீத் அதிர்ச்சி அடைந்ததுடன் அருகில் இருந்தவர்களிடத்து உதவி கோரினார். இதன்பின், அங்கிருந்தவர்களின் உதவியுடன் உமேஷ் பிரஹலாத்ராவை , மகன் சங்கீத் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

    இதனிடையே, சங்கீத் கோத்வாளி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன்படி, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஜூன் 25-ல் முதாசீர் அகமது (22), ஷாரூக் பதான் (25) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அளித்த தகவலின்படி ஜூன் 25-ல் அப்துல் தவ்பிக் (24), சோயிப் கான் (22), அதிப் ரசீத் (22) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். மேலும் ஷமீம் அகமது மற்றும் பெரோஸ் அகமது ஆகியோர் தலைமறைவாக உள்ளார். இவரை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

    இது குறித்து காவல்துறையினர் கூறியதாவது: 

    ‛‛கொலை வழக்குத் தொடர்பாக மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது ஒருவர் தலைமறைவாக உள்ளார். அவர் தான் கொலையாளிகளுக்கு ஒவ்வொரு பணிகளையும் பிரித்து கொடுத்துள்ளார். கொலை திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. 2 பேர் உமேஷ் பிரஹலாத்ராவின் நடவடிக்கைகளை கண்காணித்தனர். உமேஷ் பிரஹலாத்ராவ் மெடிக்கல் கடையில் இருந்து புறப்பட்டது பற்றி இவர்கள் 2 பேரும் தகவல் கொடுத்த நிலையில் மற்ற 3 பேரும் கொலை செய்துள்ளனர்’ 

    இவ்வாறு  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    களைகட்டும் பூரி ஜெகன்னாதர் கோவில் ரத யாத்திரை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....