Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு800 ஆண்டுகள் பழமையான கோயில்; விமர்சையாக நடைபெற்ற குடமுழுக்கு..

    800 ஆண்டுகள் பழமையான கோயில்; விமர்சையாக நடைபெற்ற குடமுழுக்கு..

    திருவள்ளூரில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் கோயிலில் 13 ஆண்டுகளுக்கு பின்னர் மகா குடமுழுக்கு நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. 

    திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், மதுரவாசல் கிராமத்தில் சுமார் 800 ஆண்டுகள் பழமை மிகுந்த ஸ்ரீ ருக்மணி நாயிகா சமேத ஸ்ரீ வேணுகோபால பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கடந்த 13 ஆண்டுகளாக குடமுழுக்கு நடைபெறாமல் இருந்து வந்தது. இந்நிலையில், கோயில் திருப்பணிகள் நடைபெற்று நேற்று குடமுழுக்கு வெகு விமர்சையாக நடைபெற்றது. 

    இதனை முன்னிட்டு சனிக்கிழமை மாலை வேத பிரபந்தம் தொடக்கம், அங்குரார்பணம், கணபதி ஹோமம் போன்ற சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் காலை கும்பதிருவாராதனம், மகா சாந்தி, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், திருமஞ்சனம் உள்ளிட்டவை நடைபெற்றன. 

    தொடர்ந்து நேற்று காலை விஸ்வரூபம், மகாபூர்ணாகுதி உள்ளிட்டவை நடைபெற்றன. இதையடுத்து ஆரணி தாசரதி பட்டாச்சாரி தலைமையில் புனித நீர் அடங்கிய கலசங்களை பட்டாச்சாரியர்கள் ஊர்வலமாக கொண்டு சென்றனர். இதைத்தொடர்ந்து, நேற்று காலை 10 மணிக்கு விமான கோபுரத்தின் மேல் புனித நீர் ஊற்றப்பட்டு மகா குடமுழுக்கு நடைபெற்றது. தொடர்ந்து, மூலவருக்கு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. 

    இதையடுத்து, மகா குடமுழக்குக்கு வந்த பக்தர்களுக்கு தீர்த்தம், அன்னதானம் உள்ளிட்டவை கோயில் வளாகத்தில் வழங்கப்பட்டது. தொடர்ந்து, உற்சவர் மாட வீதி வழியாக திருவீதி உலா வரும் நிகழ்வு நடைபெற்றது. இதில், அந்த சுற்று வட்டாத்தில் உள்ள திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

    பொன்னியின் செல்வனை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....