Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஒரே நேர்க்கோட்டில் வரப்போகும் கோள்கள்; மக்களே காணத் தயாரா?

    ஒரே நேர்க்கோட்டில் வரப்போகும் கோள்கள்; மக்களே காணத் தயாரா?

    இன்று மாலை வானில் மெர்குரி, வீனஸ், மார்ஸ், ஜூப்பிட்டர், யுரேனஸ், மூன்(நிலவு) ஆகியவற்றை ஒரே நேர்கோட்டில் காணலாம் என்று வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

    ‘வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை’ என சிவாஜி பாடியது சில நேரங்களில் மட்டும் இது விதிவிலக்கு. அப்படியான விதிவிலக்குளில் இன்றும் அடங்கப்போகிறது. 

    அதாவது, வானியல் ஆய்வாளர்கள் கூற்றுப்படி இன்று மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு, மெர்குரி, வீனஸ், மார்ஸ், ஜூப்பிட்டர், யுரேனஸ், மூன்(நிலவு) ஆகியவற்றை ஒரே நேர்கோட்டில் காணும் ஒரு அரிய நிகழ்வு நடைப்பெற உள்ளது. 

    இந்நிகழ்வை வெறும் கண்ணிலே இந்தியாவில் இருந்து பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், அளவில் சிறயது காரணமாக மெர்குரி மற்றும் யுரேனஸை டெலஸ்கோப்பின் உதவியுடன் மட்டுமே பார்க்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. வீனஸ் பிரகாசமாகவும், மார்ஸ் சிவப்பு நிறத்திலும், ஜூபிட்டர் பிரகாசமாகவும் இன்று வானில் நம் கண்களுக்கு காட்சியளிக்க இருக்கிறது. இந்நிகழ்வு வானியல் பிரியர்களுக்கு ஒரு விருந்தாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது. 

    பொன்னியின் செல்வனை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....