Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை

    சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை

    சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். இக்கோயிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

    இக்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. பிரதி தமிழ் மாதம்தோறும் அமாவாசை, பௌர்ணமி, சிவராத்திரி, பிரதோஷம் உள்ளிட்ட நாள்களில் சிறப்பு பூஜைகள் இங்கு நடைபெறும்.

    பூஜைக்கு இரண்டு நாள்கள் முதல் நான்கு நாள்கள் வரை பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்படும். குறிப்பாக, ஆடி அமாவாசை, தை அமாவாசை உள்ளிட்ட பிரதான அமாவாசை தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், இங்கு வந்து மலையேறி சுந்தரமகாலிங்க சாமியை தரிசனம் செய்வர்.

    மேலும் ஆடி அமாவாசை, பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பிரதோஷம் மற்றும் பவுர்ணமி அன்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம் ஆகும்.

    இதனைத் தொடர்ந்து, இன்று (ஆகஸ்ட் 11) ஆடி மாதம் பவுர்ணமி ஆகும். ஆனால், மலைப்பகுதியில் மழை பெய்வதற்கு உண்டான அறிகுறிகள் இருப்பதாலும், நீர்வரத்து ஓடைகளில் அதிகமாக உள்ளதாலும், இன்று வரை சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

    ஆடிமாத பவுர்ணமியை முன்னிட்டு அனுமதி ரத்து என்பது தெரியாமல் அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை வாயிலின் முன்பு காத்திருந்தனர்.

    இவர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து இருப்பதால், அனுமதி வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். மேலும், கோயிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் அதிக நீரோட்டம் உள்ள நீரோடை பகுதிகளில், பக்தர்கள் இறங்கி குளிக்க முயல்வார்கள் மற்றும் இன்னும் பல காரணங்களால் கோவிலுக்கு செல்வதற்கு தடை உள்ளதால், அனுமதி வழங்கப்பட மாட்டாது என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    இந்நிலையில், அனுமதி வழங்காததால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சில வருடங்களுக்கு முன் சதுரகிரி கோயிலில் எதிர்ப்பாராத விதமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 8 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

    புதுக்கோட்டை கோயில் தேர் விபத்து; புதிய மேற்பார்வையாளர் நியமனம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....