Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகொரோனா அதிகரிப்பின் எதிரொலி; முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம்

    கொரோனா அதிகரிப்பின் எதிரொலி; முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம்

    தில்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தாலும், கடந்த சில நாள்களாக தலைநகர் தில்லியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    இதைத்தொடர்ந்து, தில்லி அரசு கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து யோசித்து வந்ததாக தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில், தில்லி அரசு பொது இடங்களில் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கியுள்ளது.

    பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை மக்கள் கடைப்பிடிக்காததை அடுத்து, தில்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் (District Disaster Management Authority) இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    மேலும், பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருந்தால், ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று தில்லி அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....