Saturday, March 16, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புமுதுநிலை கல்வியியல் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு தொடக்கம்....

    முதுநிலை கல்வியியல் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு தொடக்கம்….

    தமிழகத்தில் உள்ள கல்வியியல் கல்லூரிகளில் முதுநிலை கல்வியியல் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு இன்று தொடங்கியுள்ளது. 

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை கல்வியியல் பட்டப்படிப்புக்கான (பி.எட்) 

    விண்ணப்பப்பதிவு இணையவழியில் கடந்த செப்டம்பர் 24-ம் தேதி தொடங்கியது. இதற்கான தரவரிசை பட்டியல் வியாழக்கிழமை வெளியாகும் என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. 

    இதையும் படிங்க:சென்னை, புறநகர் பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழை! ஒரே நாளில் தத்தளித்த தாம்பரம்

    இந்நிலையில், தற்போது முதுநிலை கல்வியியல் படிப்புக்கான (எம்.எட்) மாணவர் சேர்க்கையும் தொடங்கியுள்ளது. இதையடுத்து, மாணவர்கள் இன்று முதல் (அக்டோபர் 6-ம் தேதி) முதல் அக்டோபர் 12-ம் தேதி வரை www.tngasaedu.org என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், முதுநிலை கல்வியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் அக்டோபர் 15-ம் தேதி வெளியிடப்படும் என தகவல் வெளிவந்துள்ளது. 

    முதுநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வு அக்டோபர் 18 முதல் தொடங்கும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....