Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு பாதிப்பு: சுகாதாரத்துறை எச்சரிக்கை

    தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு பாதிப்பு: சுகாதாரத்துறை எச்சரிக்கை

    தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

    இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 4,266 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

    ஆகஸ்ட் மாதத்தில் 481 ஆக இருந்த டெங்கு பாதிப்பு திடீரென அதிகரித்து 572 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க:அம்பானி குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்…காவல்துறையினர் செய்த அதிரடி சம்பவம்!

    பருவமழை கால கட்டங்களில் இது மிக தீவிரமாக பரவும் என்பதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

    மேலும் குறிப்பாக குழந்தைகளுக்கு கொசு வலையை பயன்படுத்துதல், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருத்தல் போன்ற பல்வேறு அறிவுறுத்தல்களை சுகாதாரத்துறை வழங்கியுள்ளது. 

    இதனிடையே, ‘தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிகரிக்கவில்லை; வழக்கமாக இருந்த அளவுதான் இருக்கிறது. மழைநீர் புகும் இடங்களில் பொது பணித்துறை அதிகாரிகளுடன் பேசி மழைநீர் புகாத வண்ணம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....