Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதமே இல்லை! வெற்றிமாறனுக்கு கமல்ஹாசன் மறைமுக ஆதரவா ?

    ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதமே இல்லை! வெற்றிமாறனுக்கு கமல்ஹாசன் மறைமுக ஆதரவா ?

    இந்து மதம் என்பது ராஜராஜ சோழன் காலத்தில் கிடையாது என உலகநாயகன் கமல்ஹாசன் பேசியுள்ளார். 

    இயக்குநர் வெற்றிமாறன் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசியவை பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. வெற்றிமாறன் பேசியதாவது, திராவிட இயக்கம் சினிமாவை கையில் எடுத்ததால்தான் தற்போதும் தமிழகம் மதச்சார்பற்ற மாநிலமாக விளங்கி வருகிறது என்றார். மேலும், ‘நம்மிடம் இருந்து நமது அடையாளங்கள் தொடர்ந்து பறித்துக்கொண்டு இருக்கிறார்கள். திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கிறார்கள். ராஜராஜ  சோழனை இந்துவாக அடையாள படுத்துகிறார்கள்’ என்று கூறினார். 

    வெற்றிமாறனின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வெற்றிமாறனின் இந்த பேச்சுக்கு பா.ஜ.க கட்சி தலைவர்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

    இதையும் படிங்க:ஐரோப்பிய யூனியனை அதிர வைத்த பெண் எம்.பி! ஈரான் பெண்களுக்கு ஆதரவாக ‘முடியை வெட்டி’ ஆவேச பேச்சு 

    இந்நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படம் பார்த்துவிட்டு பத்திரிகையாளர்க்கு பேட்டியளித்த கமல்ஹாசனிடம் வெற்றிமாறன் பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

    அதற்கு கமல்ஹாசன், ‘இந்து மதம் என்பது ராஜராஜ சோழன் காலத்தில் கிடையாது. வைணவம், சமயம், சமணம் என இருந்ததே தவிர இந்து மதம் என்பது இல்லை. மேலும், அது வெள்ளைக்காரர்கள் நம்மை என்னவென்று அழைப்பதென தெரியாமல் நமக்கு வைத்த பெயர். தூத்துக்குடியை டூட்டிகொரின் என்று கூறியது மாதிரி.’ என பதிலளித்துள்ளார். கமல்ஹாசனின் இந்த பதில் வெற்றிமாறனுக்கு கமல்ஹாசன் மறைமுக ஆதரவாக இருப்பதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....