Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்வர்த்தகம்தங்கத்தின் விலை தொடர்ந்து வீழ்ச்சி!

    தங்கத்தின் விலை தொடர்ந்து வீழ்ச்சி!

    சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு மேலும் ரூ.544 குறைந்து ரூ.37,376-க்கு விற்பனையாகிறது. 

    தமிழகத்தில் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டே இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி, கிராம் ஒன்றுக்கு 4,805 ரூபாயாகவும், ஒரு சவரன் 38,440 ரூபாய்க்கும் விற்பனையானது. 

    இதனிடையே, புதன்கிழமை சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.65 குறைந்து, ரூ.4,740-க்கும் சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.37,920-க்கும் விற்பனையானது. 

    இதைத்தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் ஒரு சவரனுக்கு ரூ.544 குறைந்து ரூ.37,376-க்கு விற்பனையாகி வருகிறது. இதன்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.68 குறைந்து, ரூ.4,672-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

    இதனால், கடந்த இரண்டு நாள்களில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 1,064 ஆக குறைந்துள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....