Tuesday, May 16, 2023
மேலும்
  Homeவாழ்வியல்சுற்றுலாத்தளங்கள்கொடைக்கானலில் இவ்வளவு இருக்கா? இப்போ தெரிஞ்சுக்கோங்க; சீக்கிரம் பார்த்துடுங்க!

  கொடைக்கானலில் இவ்வளவு இருக்கா? இப்போ தெரிஞ்சுக்கோங்க; சீக்கிரம் பார்த்துடுங்க!

  மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு வருகைத் தருகின்றனர்.

  கொடைக்கானல் ஏரி:

  இந்த ஏரி மிகவும் அழகிய தோற்றத்துடன் காட்சியளிக்கின்றது. சுற்றி வரும் சாலை 5 கிலோ மீட்டர் உள்ள 24 ஹெக்டேர் அளவிலான இந்த ஏரிதான் கொடைக்கானலில் முக்கிய பகுதியாகும். இங்கிருந்து கோடையின் பல இடங்களுக்குச் செல்லலாம். இந்த ஏரியில் படகோட்டுபவர்கள் ஒன்று சேர்ந்து 1890 ல் ஒரு படகு குழாம் உருவாக்கினர். இப்படகு குழாமில் 1932இல் சுற்றுலா பயணிகளுக்கான சேவை தொடங்கப்பட்டது.

  கோல்ஃப் கிளப்:

  பில்லர் ராக் பகுதிக்கு செல்லும் சாலையில் அமைந்துள்ளது தேசிய அளவில் கோல்ஃப் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் பெருமை கொண்டது இந்த கொடைக்கானல் கோல்ஃப் கிளப். அதற்கான 18 குழிகள் அமைந்த விசாலமான புல் மைதானம் இங்கு உள்ளது. அதற்கென்று தனிக் கட்டணம் உண்டு. சுற்றுலா பயணிகள் சாலையில் செல்லும்பொழுது மொத்த பிரதேசத்தையும் காணமுடியும்.

  குக்கல் குகைகள்:

  கொடைக்கானலில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் பூம்பாறை என்னும் இடத்தில் இக்குகைகள் காணப்படுகின்றன. இங்குள்ள குகைகள் உண்மையில் பாறைப்பாளங்களில் தொங்கிகொண்டு உள்ளன என்றுதான் சொல்ல வேண்டும். 1500 மீட்டர் உயரத்தில் இப்பாறை மறைவிடம் உள்ளது. உச்சியிலிருந்து பார்த்தால் மஞ்சம்பாத் எனும் பள்ளத்தாக்கில் காட்டெருதுகள் செல்வதை காண முடியும்.

  கரடி சோலை அருவி:

  கரடி சோலை அருவி கொடைக்கானல் ஏரியில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்திலும் பேருந்து நிலையத்தில் இருந்து 16 கிலோ மீட்டர் தூரத்திலும் கரடி சோலை உள்ளது. இந்த அழகிய இடம் பியர் ஷோலா அருவி என்று அழைக்கப்படுகிறது. மழைக்காலத்தில் இந்த அருவி சிறப்பாக இருக்கும், மலைப்பாதை கரடுமுரடானது எச்சரிக்கை தேவை.

  பில்லர் ராக்ஸ்:

  122 மீட்டர் உயரத்தில் மூன்று நெட்டுக்குத்தான பாறாங்கற்கள் நிற்கின்றன. கம்பீரமான தோற்றம் அழகிய மலர்கள் சூழ்ந்த சிறிய தோட்டம் ஒன்றை பில்லர் ராக்ஸ் பெற்றுள்ளது. எதிலிருந்து 7.4 கிலோமீட்டர் தொலைவில் இவ்விடம் அமைந்துள்ளது.

  பேரிஜம் ஏரி காட்சி:

  பேரிஜம் ஏரி காட்சி கொடைக்கானல் ஏரியில் இருந்து 19 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பேரிஜம் ஏரியை அடைவதற்கு சற்று முன்பாக இந்த இடம் உள்ளது. இங்கிருந்து பார்த்தால் பேரிஜம் ஏரியில் சுற்றுவட்டார காட்சி தெரியும் என்பது இந்த இடத்தின் சிறப்பு.

  பூங்காக்கள்:

  பிரையன்ட் பூங்கா கலப்பின செடிகளுக்கும் அழகிய மலர்களுக்கும் புகழ்பெற்ற இடம். இங்கு பல வண்ண மலர்கள் கண்ணாடி அறையில் வைத்து வளர்க்கப்படுகின்றன. இங்கு மே மாதம் நடத்தப்படும் கோடை விழாவில் நடத்தப்படும் மலர் கண்காட்சி உலக அளவில் புகழ் பெற்றது. ஏரியின் கிழக்கு திசையில் இப்பூங்கா அமைந்துள்ளது.

  செட்டியார் பூங்கா குறிஞ்சி ஆண்டவர் கோயிலுக்குச் செல்லும் வழியில் ‘கோடை நகரின் கிழக்கு மூலையில் சிறிய திருப்பத்தில் பூங்கா அமைந்துள்ளது. இங்கு அழகிய மலர்கள் மற்றும் மரங்களும் நிறைந்து கண்ணுக்கு விருந்து படைக்கிறது.

  கோக்கர்ஸ் வாக்:

  இந்த மலைப் பாதையை கண்டறிந்தவர் கோக்கர். கொடைக்கானலின் தென்திசை உச்சியிலுள்ள இந்த இடம், பார்ப்பதற்கு ரம்மியமான செங்குத்தான மலைச்சரிவை கொண்டது.

  ஃபேரி ஃபால்ஸ்:

  அழகு மிகுந்த அருவி இது. மிகவும் ரம்மியமான அமைதி தரும் இடம். இது ஏரியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

  குறிஞ்சியாண்டவர் கோவில்:

  குறிஞ்சி ஆண்டவர் கோவில் தமிழ் கடவுளான முருகப் பெருமான் ஆண்டவராக எழுந்தருளியுள்ளார். இங்கு 12 ஆண்டுக்கு ஒருமுறை மலரும் குறிஞ்சிப்பூ இக்கோயிலுடன் தொடர்புடையது அதாவது மலையில் மட்டுமே பூக்கும் மலராக குறிஞ்சியை, தமிழர் வாழ்வு மரபு குறிப்பிடுகிறது. இங்கிருந்து பார்த்தால் பழனி திருக்கோயிலும் வைகை அணை கட்டும் தெரிவது அபூர்வ காட்சியாகும்.

  அருவிகள் பல விதம்:

  கொடைக்கானலில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் பம்பர் அருவி உள்ளது. இந்த அருவிக்கு ‘கிராண்ட் கேஸ்கட்’ என்றொரு பெயரும் உண்டு. பம்பர் அருவியிலிருந்து கீழ்ப்பாய்ந்து, வரிசையான பாறைகள் வெளியே வளைந்து நெளிந்து பொங்கி பெருகும் தண்ணீரின் அழகு காண்போரை வசீகர படுத்துகிறது.

  வெள்ளி அருவி கோடை ஏரியில் இருந்து உருவாகும் அருவி ஆகும். கொடைக்கானல் ஏரியில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. வெள்ளி அருவியில் குளிக்க அனுமதி இல்லை.

  தலையாறு அருவியை எலிவால் அருவி என்றும் அழைப்பார்கள். இந்தியாவின் உயர்ந்த அருவிகளில் ஒன்றான இது 975 அடி உயரத்திலிருந்து கொட்டும் இதன் அழகு நம்மை பரவசப்படுத்தும்.

  பசுமைப் பள்ளத்தாக்கு:

  கோல்ஃப் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் இருந்த இடத்தை காணலாம். வைகை அணை முழுவதையும் இங்கிருந்து ஒரு அழகான கோணத்தில் காணமுடியும். மிக மிக ஆழமும் அடர்த்தியும் அபாயமும் கொண்ட இந்த பள்ளத்தாக்கு ‘தற்கொலை முனை’ என்று முன்பு அழைக்கப்பட்டது.

  அமைதி பள்ளத்தாக்கு:

  பில்லர் ராக் பேரிஜம் ஏரி சாலையிலிருந்து மிக அருகில் உள்ளது அமைதி பள்ளத்தாக்கு தோற்றத்தை காண்பவர்கள் அதன் பேரமைதியை கண்டு மலைத்து நிற்பார்கள் இடத்திற்குச் செல்லும் பார்வையாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

  வருடம் முழுவதும் கொடைக்கானலில் தட்ப வெப்பநிலை இனிமையாக இருக்கும். ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையும், பின் செப்டம்பர் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை. ஜூனிலிருந்து ஆகஸ்ட் மாதம் வரை பச்சை பசுமையாய் காட்சி அளிப்பதால் அப்போதும் கொடைக்கானல் சென்று மகிழலாம்.

  வெளுத்து வாங்கும் அசானி புயலின் காரணமாக பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....