Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்செயற்கையாக சுனாமியை ஏற்படுத்தும் பரிசோதனையை முடித்த வடகொரியா..

    செயற்கையாக சுனாமியை ஏற்படுத்தும் பரிசோதனையை முடித்த வடகொரியா..

    ரேடியோ ஆக்டிவ் சுனாமியை ஏற்படுத்தும் பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தியதாக வட கொரியா அரசு தெரிவித்துள்ளது. 

    வட கொரியா தன்னிடத்தில் உள்ள ஆயுதங்களை அவ்வபோது சோதித்து வருவது வாடிக்கையான ஒன்றாகும். அதன்படியே, தற்போது கடலுக்கு அடியில் ரேடியோ ஆக்டிவ் சுனாமியை ஏற்படுத்தும் சோதனையை நடத்தியுள்ளது. 

    மேலும், இது குறித்து வெளிவந்துள்ள தகவலின்படி, வட கொரியாவின் தென் பகுதியில் உள்ள ஹம்க்யோங் மாகாணத்தில் கடலுக்கு அடியில் ரகசிய ஆயுதத்தை செலுத்தினோம். இது 80 முதல் 150 மீட்டர் ஆழத்தில் 59 மணி நேரத்திற்கும் மேலாக பயணித்து அதன் கிழக்கு கடற்கரையில் வெடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்தச் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதற்கு வட கொரிய அதிபர் கிம் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக வட கொரிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த சோதனையில் எந்தவிதமான ஆயுதத்தை வட கொரியா பயன்படுத்தியது என்பது தெரிவிக்கப்படவில்லை.

    வட கொரியாவின் இந்த பரிசோதனை காரணமாக கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

    மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 55 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....