Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசாத்தான்குளம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆலங்கட்டி மழை

    சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆலங்கட்டி மழை

    தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று ஆலங்கட்டி மழை பெய்தது. 

    தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    இந்நிலையில் நேற்று, தூத்துக்குடி மாவட்டத்தில் காலை முதல் வெயில் அதிகமாக காணப்பட்டது. இதையடுத்து மதியம் 1 மணிக்கு மேல் மாவட்டத்தின் பல பகுதிகளில் காரிருள் சூழ்ந்தது. 

    இதைத்தொடர்ந்து, சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. பேய்க்குளம், மேல பேய்க்குளம், கோமா நேரி, பழனியப்புரம் உள்ளிட்ட பல பகுதிகளில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது. இதன்காரணமாக அப்பகுதி மக்கள் அனைவரும் ஆலங்கட்டியை கையில் எடுத்து விளையாடி மகிழ்ச்சி அடைந்தனர். 

    தமிழக மீனவர்களை கைது செய்வது இந்தியாவுக்கு விடுக்கப்படும் சவால்- பாமக தலைவர்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....