Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாரிமோட் பேட்டரியை விழுங்கிய 2 வயது சிறுவன்; 20 நிமிடங்களில் மருத்துவர்கள் செய்த சாதனை!

    ரிமோட் பேட்டரியை விழுங்கிய 2 வயது சிறுவன்; 20 நிமிடங்களில் மருத்துவர்கள் செய்த சாதனை!

    கேரளத்தில் 2 வயது சிறுவன் வயிற்றில் இருந்த ரிமோட் பேட்டரியை மருத்துவர்கள் 20 நிமிடங்களில் அகற்றி சிறுவனைக் காப்பாற்றி இருக்கின்றனர். 

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த ரிஷிகேஷ் என்ற 2 வயதுடைய சிறுவன் 5 சென்டி மீட்டர் நீளமும் 1.5 சென்டி மீட்டர் அகலம் உடைய பேட்டரியை விழுங்கிவிட்டான். உடனே அவரது பெற்றோர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதையடுத்து அங்குள்ள மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி, தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

    தனியார் மருத்துவமனை இரைப்பை குடல் மருத்துவ நிபுணர்கள், வயிற்றில் சிக்கி இருந்த பேட்டரியை இருபதே நிமிடங்களில் வெளியே எடுத்தனர். 

    இந்தச் சிகிச்சை தொடர்பாக பேசிய இரைப்பை குடல் மருத்துவ நிபுணரான ஜெயக்குமார், பெறோர்கள் தாமதிக்காமல் சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து வந்ததாகவும், உள்ளூர் மருத்துவர்கள் தெரிவித்ததன்படி, சிறுவனின் வயிற்றில் இருந்து பேட்டரி எடுப்பதற்கான முயற்சிகளை தொடங்கியதாகவும் தெரிவித்தார். 

    மேலும் சிறுவனுக்கு மயக்க மருந்து கொடுத்து, பிறகு 20 நிமிடங்களில் வயிற்றில் இருந்த பேட்டரியை நீக்கியதாகவும், வேறு எந்த பகுதியில் பேட்டரி சிக்கி இருந்தாலும் சவாலாக இருந்திருக்கும் என்றும் தற்போது சிறுவன் நலமாக இருப்பதாகவும் கூறினார்.

    106 வீரர்களுடன் நடுக்கடலில் மூழ்கிய போர் கப்பல்! தேடுதல் பணி தீவிரம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....