Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபரந்தூர் விமான நிலையத்திற்கு எதிரான மக்களின் பேரணி தற்காலிகமாக ஒத்திவைப்பு!

    பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிரான மக்களின் பேரணி தற்காலிகமாக ஒத்திவைப்பு!

    பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக பேரணி நடைபெற்றபோது அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதன் காரணமாக தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. 

    காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், பரந்தூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள சுமார் 13 கிராமங்களை உள்ளடக்கிய 4,750 ஏக்கர் பரப்பளவில் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்படும் என முன்னதாக மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவிப்பை வெளியிட்டன. மேலும் பரந்தூர், நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமங்களில் உள்ள விளை நிலங்கள், நீர் நிலைகள், குடியிருப்புகள் ஆகியவை கையகப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான பணிகளில் தமிழக அரசு தீவிரமாக இறங்கி செய்து வருகிறது.

    இதைத்தொடர்ந்து, விமான நிலையம் அமைக்கப்படும் நாகப்பட்டு, நெல்வாய், தண்டலம், எஃனாபுரம், மடப்புரம், மேலேறி ஆகிய கிராமப் புறங்களின் விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புகள் அகற்றப்பட்டுள்ளன. அதே சமயம், பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதை அவ்வூர் சுற்றுவட்டார கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

    இந்நிலையில், பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்று வட்டார கிராம மக்கள் 150 வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முக்கி இன்று பேரணி நடத்தப்படும் என பரந்தூர் விமான நிலைய கிராம மீட்பு ஒருங்கிணைப்புக் குழுவினர் அறிவித்திருந்தனர். 

    அதே சமயம் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறியும் கருப்புக்கொடி ஏந்தி மக்கள் பேரணியில் கடலந்துகொண்டனர். அப்போது கோட்டாட்சியர், காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர், தாசில்தார் ஆகியோர் மக்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். 

    மேலும் அவர்கள் அமைச்சருடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்துவதாக உறுதி அளித்ததன்பேரில் போராட்டம் தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டது. 

    இதுகுறித்து நாளை முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

    106 வீரர்களுடன் நடுக்கடலில் மூழ்கிய போர் கப்பல்! தேடுதல் பணி தீவிரம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....