Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமாணவர்களின் வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற கர்நாடக உயர்கல்வித்துறை உத்தரவு

    மாணவர்களின் வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற கர்நாடக உயர்கல்வித்துறை உத்தரவு

    அனைத்து மாணவர்களின் வீடுகளிலும் ஆகஸ்ட் மாதம் 11 முதல் 17ம் தேதி வரை இந்திய தேசியக்கொடியை ஏற்றிவைக்க கர்நாடக உயர்கல்வித்துறை துறை  உத்தரவிட்டுள்ளது.

    இந்தியா சுதந்திரம் அடைந்து வருகிற ஆகஸ்ட் 15ம் தேதியுடன் 75 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி இந்த ஆண்டு சுதந்திர தின பவள விழாவை கோலாகலமாகக் கொண்டாட ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    75ம் ஆண்டு பவளவிழாவினை சிறப்பாக கொண்டுவதற்கான நடவடிக்கைகளை கர்நாடக அரசு மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக கர்நாடக உயர்கல்வித் துறை மந்திரி அஸ்வத் நாராயணன், மாநிலத்தில் உள்ள அனைத்து உயர்கல்வி  நிறுவனங்களுக்கும், கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்வித்துறையின் கீழ் உள்ள நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

    அந்த சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:

    75ம் ஆண்டு சுதந்திர தின விழாவை அனைத்து தரப்பு மக்களும் உற்சாகமாகக் கொண்டாடும் வகையில் நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில், 75ம் ஆண்டு சுதந்திர தின விழாவை சிறப்பிக்க பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களில் படித்து வரும் மாணவ-மாணவிகள் அனைவரின் வீடுகளிலும் ஆகஸ்ட் 11 முதல் 17ம் தேதி வரை மூவர்ண தேசியக் கோடியை ஏற்ற வேண்டும்.

    மாநிலத்தின் கீழ் உள்ள பல்கலைக்கழகங்களின் கீழ் வரும் அனைத்து கல்லூரிகள், நிறுவனங்கள் மற்றும் டி.சி.டி.இ-ன் கீழ் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் பெறாத கல்லூரிகள் நமது தேசியக்கொடியை ஏற்றி தங்கள் தேசிய பெருமையை வெளிப்படுத்த வேண்டும்.

    இது குறித்து மாணவ, மாணவிகளுக்கு தெரியப்படுத்த, அந்தந்த கல்வி நிர்வாகங்கள் தங்களது அறிவிப்புப் பலகையில் தகவல்களை வெளியிட வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பெருமான்மையை நிருபித்தார் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....