Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இலங்கைஎரிபொருள் தட்டுப்பாடு- இலங்கையில் பள்ளிகளுக்கு விடுமுறை!

    எரிபொருள் தட்டுப்பாடு- இலங்கையில் பள்ளிகளுக்கு விடுமுறை!

    இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை நேர்ந்துள்ளது. 

    இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிச் சூழலால், சுகாதாரம், போக்குவரத்து, உணவு போன்ற அத்தியாவசியத் தேவைக் கிடைப்பதற்கே நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தற்போது இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

    எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கு முன்பாக பல்லாயிரக்கணக்கானோர்  நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள்.

    இந்நிலையில், எரிபொருள் குறித்து எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று கருத்து தெரிவித்துள்ளதாவது:

    “தற்போதைய நிலவரப்படி, 12,774 மெட்ரிக் டன் டீசல் கையிருப்பில் உள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். அதோடு, 92 ரக பெட்ரோல் 1414 மெட்ரிக் டன்னும், 95 ரக பெட்ரோல் 2647 மெட்ரிக் டன்னும், சூப்பர் டீசல் 233 மெட்ரிக் டன்னும், விமானங்களுக்குப் பயன்படுத்தப்படும் எரிபொருள் 500 மெட்ரிக் டன்னும் கையிருப்பில் உள்ளது” என்று அவர் தெரிவித்தார். 

    எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, இலங்கையில் உள்ள பள்ளிகளுக்கு இன்று முதல் வருகிற எட்டாம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

    சமூகத்தின் துணையின்றி நீதித்துறை இயங்காது – நீதிபதி ஜே.பி.பார்திவாலா!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....