Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇரு முக்கிய தீவிரவாதிகளைப் பிடித்த காஷ்மீர் மக்கள்!

    இரு முக்கிய தீவிரவாதிகளைப் பிடித்த காஷ்மீர் மக்கள்!

    ஜம்மு காஷ்மீரில் உள்ள துக்ஸன் தோக் எனும் கிராமத்தில் நேற்று லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த இரண்டு முக்கிய தீவிரவாதிகள் கைதுசெய்யப்பட்டனர். உள்ளுர் மக்கள் துணிச்சலாகச் செயல்பட்டு, இரண்டு தீவிரவாதிகளையும் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.

    தாலிப் ஹுசைன் மற்றும் பைசல் அகமது எனப்படும் இந்த இருவரையும் காவல்துறையினர் பல காலமாக தேடி வந்தனர். காவல்துறையினரின் தேடலில் இருந்து தப்பிக்க இடம் மாறிக்கொண்டிருந்த இரண்டு தீவிரவாதிகளும் துக்ஸன் தோக் கிராமத்துக்கு வந்தனர்.

    இந்த இருவரையும் தீவிரவாதிகள் என்று கண்டறிந்த கிராம மக்கள் துணிச்சலாகச் செயல்பட்டு, அவர்களைப் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர். இரண்டு ஏகே 47 ரக துப்பாக்கிகளையும், ஏழு கையெறி குண்டுகளையும் ஏராளமான தோட்டாக்களையும் காவல் துறையினர் தீவிரவாதிகளிடமிருந்து கைப்பற்றினர்.

    இந்த இருவரில், தாலிப் ஹுசைன் ஏற்கனவே வெடிபொருட்கள் வைத்திருந்த குற்றத்துக்காக தேடப்படும் நபராவார். இவரைக் கண்டுபிடித்து கொடுப்பவருக்கு தக்க சன்மானங்கள் வழங்கப்படும் என்றும் காவல் துறை தரப்பில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    பாகிஸ்தானில் உள்ள காசிம் எனப்படும் தீவிரவாதியுடன் தொடர்பில் இருந்து வந்த தாலிப் ஹுசைன், ஜம்மு காஷ்மீரில் உள்ள பாஜக கட்சியின் சமூக வலைதளத்தினை நிர்வகித்து வந்தவர் என ஜம்மு காஷ்மீர் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

    காஷ்மீரில் உள்ள ரஜோரி கிராமத்தில் நடந்த மூன்று குண்டு வெடிப்புச் சம்பவங்களுக்கும் தாலிப் ஹுசைனுக்கு தொடர்பு உள்ளதாகவும், பிடிபட்ட இரண்டு தீவிரவாதிகளுமே லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைக் கையாளும் சல்மான் என்பவருடன் தொடர்பில் இருந்து வருவதாகவும் காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையின்போது தெரிய வந்துள்ளது.

    கிராம மக்களைப் பாராட்டிய காஷ்மீர் ஆளுநர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஆளுநர் மனோஜ் சின்ஹா, கிராம மக்களின் தைரியத்தைப் புகழ்ந்துள்ளார். மேலும் தீவிரவாதிகளைப் பிடித்து கொடுத்த கிராம மக்களுக்கு ரூபாய் ஐந்து லட்சம் பரிசாக அறிவித்துள்ளார்.

    இந்த சம்பவத்தைப் பற்றி  கூறிய மனோஜ் சின்ஹா, ‘துக்ஸன் தோக் கிராம மக்களின் தைரியத்துக்கு எனது மரியாதை கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். சாதாரண மக்களின் இந்த துணிகரச் செயலானது தீவிரவாதத்துக்கான முடிவு வெகுதூரத்தில் இல்லை என்பதினைக் காட்டுகிறது. தீவிரவாதிகளை திறமையாக கையாண்ட கிராம மக்களுக்கு ஐந்து லட்சம் ருபாய் சன்மானமாக அறிவிக்கப்படுகிறது.’ 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....