Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்கைலாசா நாட்டை ஐ.நா. அங்கீகரிக்கிறதா? - ஐ.நா. சபைக் கூட்டத்தில் கைலாசா பிரதிநிதி

    கைலாசா நாட்டை ஐ.நா. அங்கீகரிக்கிறதா? – ஐ.நா. சபைக் கூட்டத்தில் கைலாசா பிரதிநிதி

    ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் நித்தியானந்தாவின் ‘கைலாசா’ பிரதிநிதி கலந்துகொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

    இந்திய நாட்டில் நித்தியானந்தா மீது கடத்தல், குழந்தைகளை சட்டவிரோதமாக அடைத்து வைத்தல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

    இதையடுத்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதன் காரணமாக நித்தியானந்தா வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றதாக சொல்லப்படுகிறது. மேலும் வெளிநாட்டிற்கு தப்பி சென்றதாக சொல்லப்பட்ட நித்தியானந்தா மத்திய ஈக்வடாரில் தீவு ஒன்றை வாங்கி அதற்கு, ‘கைலாசா’ நாடு என பெயரிட்டு, அதற்கான கொடியையும் வெளியிட்டதாக தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், கடந்த 22 ஆம் தேதி ஜெனிவாவில் நடைப்பெற்ற ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் நித்தியானந்தாவின் பெண் சீடர்கள் கலந்துகொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இங்கு நடைபெற்ற பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் கூட்டத்தில் கைலாசாவை பிரதிநித்துவப்படுத்தும் வகையில் விஜயப்ரியா என்பவர் கலந்து கொண்டார். 

    அப்போது அவர் பேசுகையில், கைலாசா என்பது இந்து மதத்தின் முதல் இறையாண்மை கொண்ட நாடு எனவும், இந்து மதத்தின் உயர்ந்த தலைவரான நித்தியானந்தாவால் கைலாசா உருவாக்கப்பட்டது எனவும் தெரிவித்தார். 

    தொடர்ந்து அவர், நித்தியானந்தா இந்து மதத்தின் மரபுகளை புதுப்பிப்பதாகவும், இந்து மதத்தின் பூர்விக மரபுகள் மற்றும் வாழ்க்கை முறையைப் புதுப்பித்ததற்காக நித்தியானந்த கடுமையான துன்புறுத்தல் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு ஆளாகியுள்ளதாகவும் கூறினார்.  

    நித்தியானந்தா மற்றும் கைலாசாவில் உள்ள புலம்பெயர்ந்த 20 லட்சம் மக்கள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்க சர்வதேச அளவில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும்? என ஐ.நா.விடம் விஜயப்ரியா கேள்வி எழுப்பினார். 

    மேலும் கைலாசா 150 நாடுகளில் தூதரகங்களை கொண்டிருப்பதாகவும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களை நிறுவி இருப்பதாகவும் தெரிவித்தார். 

    இந்தச் சம்பவம் தொடர்பான தகவல் வெளியான பிறகு, கைலாசா நாட்டை ஐ.நா. அங்கீகரிக்கிறதா என பல கேள்விகள் எழுந்துள்ளன. 

    ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சால் சுருண்ட இந்தியா…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....