Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்விஷாலின் 'மார்க் ஆண்டனி' படப்பிடிப்பில் மீண்டும் விபத்து..

    விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ படப்பிடிப்பில் மீண்டும் விபத்து..

    நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வரும் ‘மார்க் ஆண்டனி’ படத்தில் நேர்ந்த விபத்தில் லைட்மேன் காயமடைந்துள்ளார். 

    ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிப்பெற்ற ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ படம் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியவர் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். இப்படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் வெளியான ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை இயக்கினார். 

    இதைத்தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய பஹிரா படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், விஷால் நடிப்பில் உருவாகும் மார்க் ஆண்டனி படத்தை இயக்குவதாக அறிவித்தார். அதன்படியே படத்தின் படப்பிடிப்புகளும் தொடர்ந்து வந்தன. 

    சென்னை பூந்தமல்லியில் உள்ள ஈ.வி.பி. ஃபிலிம் சிட்டியில் படத்தின் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு வந்தது. அப்போது, காட்சிக்காக பயன்படுத்தப்பட்ட லாரி நிற்காமல் செட்டில் வேகமாக மோதியுள்ளது. இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது. விபத்தில் காயங்கள் ஏதும் ஏற்பட்டதா என்ற கேள்விகளும் கேட்கப்பட்டன.

    இதைத்தொடர்ந்து, இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது. மேலும், இந்த விபத்தில் இருந்து நடிகர் விஷால் நூலிழையில் தப்பினார்.

    இந்நிலையில், மார்க் ஆண்டனி படப்பிடிப்பில் மீண்டும் நேற்று விபத்து நடந்துள்ளது. படத்தின் செட் பணிகளுக்காக போடப்பட்டிருந்த கயிறு அறுந்து லைட்மேன் மீது விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. 

    மனைவியை அறைந்த கணவனுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....