Sunday, March 17, 2024
மேலும்
    Homeசமூக வலைதளம்கடல் அலையில் மனித முகம் போன்று தோன்றிய புகைப்படம் வைரல்

    கடல் அலையில் மனித முகம் போன்று தோன்றிய புகைப்படம் வைரல்

    கலங்கரை விளக்கத்தில் மோதிய கடல் அலையில் மனித முகம் போன்று தோன்றிய ஒரு புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 

    இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் இயன் ஸ்பரொட். இவருக்கு வயது 41. இந்நிலையில், இவர் கொரோனா பொது ஊரடங்கு காலத்தில் மன அழுத்த நிலையில் இருந்து வெளிவருவதற்காக புகைப்பட கலைஞராக மாற்றம் கொண்டார். இவர் பல இடங்களுக்கு சென்று இயற்கை நிகழ்வுகளை புகைப்படங்களாக எடுப்பதை வழக்கமாக வைத்து வருகிறார். 

    இந்நிலையில், இயன் ஸ்பரொட் கடந்த சில நாள்களுக்கு முன்பாக இங்கிலாந்தில் இருக்கும் சதர்லாந்து பகுதியில் உள்ள கடற்கரைக்கு சென்றார். அப்போது அங்கு பல புகைப்படங்களையும் எடுத்தார். இவர் அப்பகுதியில் சுமார் 12 மணி நேரமாக புகைப்படம் எடுப்பதில் ஆழ்ந்துள்ளார். அப்போது இவர் எடுத்த புகைப்படங்களை பார்த்தபோது ஒரு அதிசயமான விஷயத்தை கவனித்தார். 

    இயன் ஸ்பரொட்  புகைப்படங்களில் ஒரு புகைப்படத்தில் கடல் அலை கலங்கரை விளக்கத்தில் மோதி, அது மனித முகம் போன்ற உருவத்தில் காட்சியளிக்கிறது. இந்தப் புகைப்படத்தை இயன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 

    விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ படப்பிடிப்பில் மீண்டும் விபத்து..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....