Sunday, March 17, 2024
மேலும்
  Homeஜோதிடம்காதல் விவகாரங்களை.....இந்த வார ராசிபலன்கள் துலாம் முதல் விருச்சிகம் வரை !

  காதல் விவகாரங்களை…..இந்த வார ராசிபலன்கள் துலாம் முதல் விருச்சிகம் வரை !

  துலாம்:

  அதிர்ஷ்டத்தை நம்பியிருக்காதீர்கள். உங்கள் கடின உழைப்புதான் உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும். பணிச் சுமை அதிகமாக காணப்படும். இது உங்களுக்கு கவலையை அளிக்கும். உங்களுக்கு கொடுக்கப்படும் பணிகள் அதிகமாகவும் அதை குறித்த நேரத்தில் நிறைவேற்ற இயலாத நிலைமையும் காணப்படும். சிறந்த முறையில் திட்டமிடாததே இதற்கு காரணமாக அமையும்.

  நிதிவளர்ச்சி நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது. சரியான முடிவெடுக்க முடியாதவாறு சில குழப்பங்கள் காணப்படும். அதனால் உங்கள் துணையிடம் உங்கள் உணர்வுகளைக் கொட்டுவீர்கள்.வெப்ப சம்பந்தமான பிர்ச்சினைகளால் பாதிக்கப்படலாம்.

  விருச்சிகம்:

  பலவிதமான வாய்ப்புகள் கிடைக்கும். இது உங்களுக்கு திருப்தியை அளிக்கும்.நன்றாக பணியாற்றுவீர்கள். உங்கள் மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். உங்கள் திறமை வெகுவாக பாராட்டப்படும்.நிதிவளர்ச்சி அபாரமாக காணப்படும். உங்கள் கடின உழைப்பின் பலனாக இன்று ஊக்கத்ததொகை வடிவில் கூடுதல் நிதி ஆதாயங்களை அடைவீர்கள்.உங்கள் உணர்வுகளை உங்கள் துணையிடம் சாதகம் பெறும் வகையில் வெளிப்படுத்துவீர்கள்.ஆரோக்கியம் சிறந்த முறையில் இருக்கும்.ஆற்றலுடன் காணப்படுவீர்கள். இதனால் ஆரோக்கியம் ஸ்திரமாக இருக்கும்.

  தனுசு:

  சிறிய முயற்சியிலேயே பெரிய வெற்றியைக் காண்பீர்கள். வாரத்துவக்கத்தில் உங்கள் செயல்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் காத்திருக்கின்றன. நீங்கள் நன்றாக பணியாற்றுவீர்கள். ஆனால் உங்கள் சக பணியாளர்கள் அல்லது உங்களின் கீழ் பணிபுரிவோரிடத்தில் கருத்து வேறுபாடுகளை உண்டாகலாம். எதிர்பாராத பணவரவு காணப்படும். பூர்வீக சொத்துக்கள் மூலமாக நிதி ஆதாயத்திற்கு வாய்ப்பு உள்ளது. உங்கள் காதல் விவகாரங்களை அடுத்த நாளைக்கு ஒத்திப்போடுவது நல்லது. ஆரோக்கியம் சீராக இருக்கும். குறைபாடுகள் ஏதும் காணப்படாது.

  மகரம்:

  உங்கள் சமயோஜித புத்தியின் மூலம் உங்கள் நண்பர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உங்கள் பணிகளைக் கையாளும் பொழுது கூடுதல் கவனம் தேவை. முறையாக அட்டவணை அமைத்து பணியாற்ற வேண்டியது அவசியம். வரவும் செலவும் இணைந்து காணப்படும். கணிசமான பணத்தை நல்ல வகையில் பராமரிக்க சிறிது போராட்டமாக இருக்கும். உங்கள் துணையுடன் நல்லுறவு காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பெரிய அளவிலான ஆரோக்கிய பாதிப்புகள் ஏதும் காணப்படாது.

  கும்பம்:

  மனஅழுத்தம் மற்றும் அசௌகரியங்கள் காணப்படும். கவனமாக திட்டமிட்டு இன்றைய தினத்தை நிர்வகிக்க வேண்டும். எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள்.பணியைப் பொறுத்தவரை நல்ல நிலை காணப்படும். உங்கள் மேலதிகாரிகளிடமிருந்து அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. புதிய வேலைவாய்ப்புக்கும் வாய்ப்பு உள்ளது. வரவும் செலவும் இணைந்து காணப்படும். வரவை விட செலவுகள் அதிகமாக காணப்படும். எனவே பணத்தை கவனமாகக் கையாள வேண்டும். உங்கள் துணையுடன் நல்லுறவு காணப்படாது.உங்கள் திருமணத்திற்காக பெற்றோரின் அனுமதி பெற முயல்வீர்கள். ஆனால் வெற்றி கிடைக்காது. ஒவ்வாமை பிரச்சினைகள் காரணமாக தொண்டை வலி காணப்படலாம்.

  மீனம்:

  உங்கள் செயல்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். நீங்கள் உங்களின் சொந்த முடிவு எடுப்பதில் உறுதி காட்டுவீர்கள். எளிதான பணிகள் கூட சுமையாகத் தெரியும். புத்திசாலித்தனத்துடன் நடந்து உங்கள் திறமையை நிரூபிக்க வேண்டும். பணிநிமித்தமான பயணங்களுக்கு வாய்ப்பு உள்ளது.நிதி வளர்ச்சி சீராக இருக்கும். உங்கள் சேமிப்பு அதிகரிக்கும். உங்கள் துணையிடம் அன்பான வார்த்தைகளை பகிர்ந்து கொள்வீர்கள். உங்களின் இந்த அணுகுமுறை உறவில் நல்லிணக்கத்தை பராமரிக்க உதவும்.ஆரோக்கியம் சீராக இருக்கும். தேக ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள்.

  வாரத்தின் துவக்கம் சவால்கள் நிறைந்ததாக காணப்படுகிறதா?…இந்தவார ராசிபலன்கள் உங்களுக்காக இதோ!

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....